நடிகை ரஞ்சிதாவுடன் இவர் இணைந்திருந்த காட்சிகள் டி.வி.,யில் ஒளிபரப்பான விஷயம் நாடு முழுவதும் உள்ள இவர்களது பக்தர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவர் எங்கே இருக்கிறார் என இரு மாநில போலீசார் இவரை தேடி வரும் வேளையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டிருப்பது மேலும் நித்தியானந்தரின் விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பக்க பலமாக இ. மெயில்கள் குவிகிறது: இந்த வீடியோவில் நித்தியானந்தர் பேசியிருப்பதாவது: நான் எந்த ஒரு தவறும் செய்யவில்லை.என ஆணித்தரமாக சொல்லிக்கொள்கிறேன். நானோ எனது தியான பீடமோ எவ்வித தவறான செயல்களிலும் ஈடுபடவில்லை. என்பதை ஆழமாக சொல்ல விரும்புகிறேன். எனது சோதனையான இந்த காலக்கட்டத்தில் எனது சிஷ்யர்கள், எனது நல விரும்பிகள் எனக்கு உலகம் முழுவதும் பக்கப்பலமாக இருந்து வருகின்றனர். இக்கட்டான காலத்தில் வெளிநாடுகளில் இருந்து எனக்கு இ மெயில் மூலம் ஆதரவு தெரிவித்துள்ளனர். பலர் கடிதங்களை குவித்துள்ளனர். இவர்களுக்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
நல் வித்துக்களை பரப்பியவன்: நான் கடந்த பல ஆண்டுகளாக உலகம் முழுவதும் நல் வித்துக்களை பரப்பியுள்ளேன். இதன் காரணமாக எனக்கு இந்த ஆதரவு இருக்கிறது. ஆணித்தரமாக சொல்லிக்கொள்ள கடமைப்பட்டுள்ளேன். வதந்திகளையும், செய்திகளையும் அறிவீர்கள். நாங்கள் இது தொடர்பான செய்திகளையும், உண்மைகளையும் திரட்டி வருகிறேன். எல்லாவற்றையும் திரட்டி எல்லா உண்மைகளையும் நான் உங்கள் முன்பு திறந்து வைக்கிறேன். எல்லோரும் பொறுமையாக இருங்கள் , யாரும் தவறான முடிவுக்கு வர வேண்டாம். நான் சட்ட ரீதியான எவ்வித தவறும் செய்யவில்லை. எனக்கு ஆதரவாக இருந்து வரும் அனைவருக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சி.டி.,க்கள் தியான பீடத்தின் மூலமாக பல செய்தி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவரது மடத்தின் அதிகாரப்பூர்வ இணைய தளத்திலும் இந்த வீடியோ அப் செய்யப்பட்டுள்ளது.
தன்னிலை விளக்க கடிதம்: மேலும் நி்த்தியானந்தரினன்அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பான ( அந்த ) வீடியோ தொடர்பாக ஒரு விளக்க கடிதமும் பிரசுரிக்கப்பட்டுள்ளது. இந்த கடிதத்தில் ; களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு, தொலைக்காட்சிகளில் சி்த்தரிக்கப்பட்டுள்ளது. பாதககத்தை ஏற்படுத்தும் கிராபிக்ஸ் அதி நவீன நுட்பம் மூலம் உருவாக்கப்பட்டுள்ளது. என்றும் கூறப்பட்டுள்ளது.விரைவில் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நித்தியானந்தர் உலக அளவில் லட்சக்கணக்கான பக்தர்கள் வாழ்வில் ஆழமான முன்னேற்றங்களை தந்தவர். இவரது கருணையை புரிந்தவர்களுக்கு மேலும் விளக்வுரை தேவையில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’