வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

கேரளாவில் பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கியதாக தகவல் - போலீஸ் விசாரணை


திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள இளம்பெண் பக்தை வீட்டில் நித்தியானந்தா பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.

நடிகை ரஞ்சிதாவுடன் சாமியார் நித்தியானந்தா படுக்கை அறையில் நெருக்கமாக இருக்கும் காட்சி வெளியானது. இதையடுத்து நித்தியானந்தாவுக்கு எதிராக பக்தர்கள் போராட்டத்தில் குதித்தனர். அவரை கைது செய்ய வலியுறுத்தி பல பகுதிகளில் போலீசில் புகார் தெரிவித்து வருகின்றனர்.

அதன் அடிப்படையில் நித்யானந்தா மீது கற்பழிப்பு, மோசடி உள்பட 6 பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். படுக்கை அறை காட்சி வெளியானதை தொடர்ந்து நித்யானந்தாவு்ம், ரஞ்சிதாவும் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வருகின்றனர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

இந்த நிலையில், அமெரிக்க குடியுரிமை பெற்ற கேரள மாநிலம் கோழஞ்சேரியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நித்யானந்தாவின் பக்தையாக இருந்து வருகிறார். இவர் அமெரிக்காவில் உள்ள நித்யானந்தரின் ஆசிரமத்திற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இவருக்கு சொந்தமான பங்களா ஒன்று கோழஞ்சேரியில் உள்ளது. அவ்வுப்போது கேரளா வரும் அந்த இளம்பெண் அந்த பங்களாவில் தங்கி விட்டு மீண்டும் அமெரிக்கா செல்வார்.

சமீபத்தில் அந்த பெண் நித்யானந்தாவை கோழஞ்சேரி அழைத்து வந்து அங்கு அவரது பெயரில் ஆசிரமம் ஓன்றை தொடங்கியுள்ளார். இதில் ஏராளமான பக்தர்களும் சேர்ந்துள்ளனர்.

இந்நிலையில் தலைமறைவாக உள்ள நித்யானந்தா கோழஞ்சேரியில் பதுங்கியிருப்பதாக கேரள தனிப்பிரிவு போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் கோழஞ்சேரி பகுதிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’