வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 30 மார்ச், 2010

புகலிடம் வழங்குவதில் புதிய சட்டத்தை அமுல்படுத்த தீர்மானம் : கனடா

புகலிடம் வழங்கும் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள கனேடிய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இவ்வாறு புகலிடம் வழங்கும் சட்டத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும் பட்சத்தில் இலங்கை, இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து தஞ்சம் கோருவோருக்கு பாதிப்பு ஏற்படும் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

தற்போது கனடாவில் அமுலிலுள்ள குடிவரவு, குடியகல்வு மற்றும் புகலிடம் வழங்கும் சட்டங்களில் பல்வேறு சிக்கல்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குடிவரவு, குடியகல்வு மற்றும் புகலிடம் வழங்குவதில் கனடா மிகவும் நெகிழ்வுத் தன்மையுடன் கூடிய அணுகுமுறையையே தற்போது பின்பற்றி வருகின்றது.
புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் வழங்குவதில் அபிவிருத்தி அடைந்த நாடுகளில் மிக முக்கிய பங்கை கனடா வகிக்கின்றது.
அத்துடன் போலியான முறையில் புகலிடம் கோருவோருக்கு எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கும் வண்ணமே இந்த புதிய சட்டம் அமுலாக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
போலியான முறையில் பலர் அடைக்கலம் கோருவதாகவும், அவ்வாறானவர்களை தடுத்து நிறுத்துவதற்காகவே இவ்வாறு மாற்றத்தை ஏற்படுத்த எண்ணியுள்ளதுடன், நியாயமான கோரிக்கைகளுடன் புகலிடம் கோருவோருக்கு அடைக்கலம் வழங்கவும் புதிய சட்டத்தில் இடம் உள்ள வகையில் தயாரிக்கப்படவுள்ளதாக கனேடிய அரசு குறிப்பிட்டுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’