![]() | |
| அணு மின் ஆலை ஒன்று |
இஸ்ரேலும், சிரியாவும் அணு மின் சக்தி தேவை என்கின்றன
மின்சாரத்தை உற்பத்தி செய்ய தமக்கு அணு சக்தி தேவை என்று பாரிஸில் நடந்த மாநாடு ஒன்றில் இஸ்ரேலும், சிரியாவும் கூறியுள்ளன.
நிலக்கரி மின்சாரத்தில் தங்கியிருப்பதைக் குறைப்பதற்காக இஸ்ரேல் புதிய அணு மின் ஆலைகளை நிர்மாணிக்க விரும்புகிறது என்று இஸ்ரேலிய உட்கட்டமைப்பு அமைச்சர் உஷி லண்டாவ் கூறினார்.
சில நிமிடங்களின் பின்னர், சிரியாவும் அணு சக்தி உட்பட மாற்று சக்தி மூலங்களைப் பெற ஆர்வமாக இருப்பதாக, சிரியாவின் துணை வெளியுறவு அமைச்சர் பைசல் மெக்டாட் அந்த மாநாட்டில் பேசினார்.
அணு சக்தியை அமைதி நோக்கில் பயன்படுத்தும் வாய்ப்பு அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் ஜோபைடன்
![]() | |
| இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடன் ஜோ பைடன் |
ஜெரூசலேத்தில் இஸ்ரேலியத் தலைவர்களைச் சந்தித்த பின்பு கருத்து வெளியிட்ட ஜோ பைடன், பயங்கரவாதக் குழுக்களுக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் இரான் இப்பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையைக் குலைக்கிறது என்று குற்றஞ்சாட்டினார்.
அமெரிக்கா-இஸ்ரேல் இடையிலான உறவின் முக்கிய அம்சமாக இஸ்ரேலின் பாதுகாப்பு விவகாரம் நீடிக்கும் என்று அவர் கூறினார்.
இஸ்ரேல்- பாலஸ்தீன சமாதானத்துக்கான வாய்ப்புகள் குறித்துக் கருத்து வெளியிடுகையில், இருதரப்பும் நேரடியாக இல்லாமல் பேச உடன்பட்டிருப்பது நிஜமான ஒரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இந்தோனேசியாவில் மூன்று தீவிரவாதிகள் பலி
![]() | |
| கொல்லப்பட்டவர்களின் சடலங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன |
2002 இல் இருநூற்றுக்கும் அதிகமானோர் பலியாகக் காரணமான பாலி குண்டு வெடிப்புக்கு திட்டமிட உதவியதாக குற்றஞ்சாட்டப்படும் துல்மதீனும் இதில் கொல்லப்பட்டாரா என்று உறுதி செய்ய தாம் முயலுவதாக அவர்கள் கூறுகிறார்கள்.
அச்சே மாகாணத்தில் கடந்த மாதம் இஸ்லாமிய தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் என்று கூறப்படும் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, இந்தோனேசியப் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் நாடளாவிய ரீதியில் தொடர்ச்சியான தேடுதல்களை நடத்தி வருகிறார்கள்.
ஹெய்தியில் கடத்தப்பட்ட சிறார்கள் மீட்பு
![]() | |
| ஹெய்தியில் பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட சில சிறார்கள் |
இந்த சிறார்கள் பொலிவிய அரசால் பராமரிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டின் அரசு வழக்கறிஞர் புரா குயுல்லர் பிபிசியிடம் தெரிவித்தார்.
ஹெய்தியில் இருக்கும் இவர்களின் பெற்றோருடன் தொடர்புகளை ஏற்படுத்த அரசாங்கம் முயன்று வருவதாகவும் அவர் கூறினார்.
அதேசமயம், இதேபோல் கடத்திவரப்பட்ட ஹெய்தி சிறார்கள் எட்டுபேரை தாங்கள் இன்னமும் தேடிவருவதாகவும், கிழக்கு நகரான சாந்தா குருஸை ஒட்டி இவர்களை தேடிவருவதாகவும் அவர் கூறினார்.
இது சம்பந்தமாக ஹெய்தி நாட்டை சேர்ந்த இரண்டு பேரும், பொலிவிய நாட்டு பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செய்தியரங்கம்
![]() | |
| இந்திய நாடாளுமன்றக் கட்டிடம் |
இந்திய நாடாளுமன்ற மேலவையில் பெண்கள் இட ஒதுக்கீட்டு மசோதா நிறைவேறியது
இந்திய நாடாளுமன்றத்திலும், மாநில சட்ட சபைகளிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடங்களை உறுதி செய்யும் மசோதா இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையாகிய மாநிலங்களவையில் நிறைவேறியுள்ளது.
நாட்டில் பெண்களின் நிலையை வலுப்படுத்தும் திசையிலான நடவடிக்கைகளில் இந்த நகர்வு ஒரு முக்கிய முன்னேற்றம் இது என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் விபரித்துள்ளார்.
தற்போது இந்த மசோதா நாடாளுமன்றத்தின் மக்களவைக்குச் செல்கிறது. அங்கு அது இலகுவாக நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நகர்வுக்கு எதிராக முறையற்ற விதத்தில் எதிர்ப்புத் தெரிவித்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் 7 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவின் முக்கிய கட்சிகள் இந்தச் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தன. ஆனால், இது சிறுபான்மையினர் மற்றும் சமூகத்தில் பின்தங்கிய குழுக்களின் பிரதிநிதித்துவத்தைப் பாதிக்கும் என்று சில சோஷலிஸ கட்சிகள் அஞ்சுகின்றன.
ராஜ்ய சபாவில் மசோதா நிறைவேற்றம் தொடர்பில் இந்திய திட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சர் வி.நாராயணசாமி தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள்ல் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
இலங்கை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஆலோசனைக் குழு நியமிக்கப் போவதாக ஐ.நா. தலைமைச் செயலர் வலியுறுத்தல்
![]() | |
| ஐ.நா. தலைமைச் செயலர் |
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் தான் நடத்திய தொலைபேசி உரையாடலின்போது இதனை தான் மஹிந்த ராஜபக்ஷவிடம் வலியுறுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
உள்ளூரில் இடம்பெயர்ந்த மக்களின் நடமாட்டம் மற்றும் அவர்களது நிலைமைகளில் முன்னேற்றத்தைக் காணுவது, ஒரு அரசியல் நல்லிணக்கத்தை காணுவது மற்றும் நடந்த நிகழ்வுகளுக்கான பொறுப்புக்கூறும் நிலைமையை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைககளில் முன்னேற்றத்தைக் காணுவது ஆகியவை தொடர்பாக ஜனாதிபதியிடம் பேசியதாகவும் பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை நிகழ்வுகள் தொடர்பில் பொறுப்புக்கூறல் குறித்த கரிசனைகளை முன்னெடுப்பதற்கான பரந்துபட்ட எல்லைகள் மற்றும் நியமங்கள், அளவீடுகள் குறித்து தனக்கு ஆலோசனை கூறுவதற்காக ஒரு நிபுணர் குழுவை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னேடுக்கப்போவதை ஜனாதிபதியிடம் தெளிவுபடுத்தியதாக அவர் கூறினார்.
இதற்காக அரசியல் விவகாரங்கள் குறித்த துணைத் தலைமைச் செயலரான லின் பாஸ்கோ அவர்களை விரைவில் இலங்கை வருவார் என்பதும் ஒப்புக்கொள்ளப்பட்டிருப்பதாகத் தெரிகிறது.
இலங்கையில் அவசர காலச் சட்டம் நீட்டிப்பு
![]() | |
மாதா மாதம் நடக்கின்ற ஒரு வழமையான நிகழ்வுதான் இது என்றாலும், இத்தடவை பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்தல் பிரச்சாரத்தில் மும்முரமாக இருப்பதால், வாக்களிப்பில் கலந்துகொண்டவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
அவசரகாலச் சட்டத்தின் மூலம் கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகள் இன்றி வருடக்கணக்கில் தடுத்து வைக்க முடியும். 90 நாட்களுக்கு ஒரு தடவை அவர்களை ஒரு நீதிபதியின் முன்பாக நிறுத்தினால் போதும்.
அரசாங்கம் போரில் வெற்றிபெற்றுவிட்ட போதிலும், நாட்டில் இன்னமும் பயங்கரவாத சக்திகள் எஞ்சியிருப்பதாக கூறுகின்ற அமைச்சர் ராஜித செனிவிரட்ண அவர்கள், நாடு மேலும் ஸ்திரநிலையை எட்டும் வரை அவசரகால சட்டம் அவசியம் என்று கூறினார்.
இந்த அவசர காலச் சட்டம் சிவப்பு நாடா முறையை - அதிகார வர்க்கத்தின் அளவுக்கதிகமான தலையீட்டை குறைக்கும் என்பதால், அது வடக்கில் அகதிகளின் மீள் குடியேற்றத்துக்கும் உதவியாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
ஆனால், ஊடக சுதந்திரம் உட்பட பலவிதமான சுதந்திரங்களை இந்த அவசர காலச் சட்டத்தைக் கொண்டு அரசாங்கம் ஒடுக்குகிறது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான கரு ஜயசூரிய குற்றஞ்சாட்டியுள்ளார்.
அம்பாறை மாவட்ட கிழக்கு மாகாண சபை உறுப்பினருக்கான பாதுகாப்பு விலக்கப்பதற்கு கண்டனம்
![]() | |
பாதுகாப்பு விலக்கப்படுள்ளமை தங்களுக்கு பெரும் உயிர் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் அம்பாறை மாவட்ட உறுப்பினரான புஷ்பராசா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாண சபையின் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களைச் சேர்ந்த மாகாண சபை உறுப்பினர்களுக்கான பொலிஸ் பாதுகாப்பு தொடர்ந்தும் வழங்கப்பட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
மீண்டும் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் கோரும் தீர்மானம் ஒன்று மாகாண சபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளதாக மற்றொரு சபை உறுப்பினரான துரைரெட்ணம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை தனக்கான பாதுகாப்பும் குறைக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஜனாதிபதியின் செயலாளருடன் பேசியதாகவும், நல்ல முடிவு கிடைக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் உ.ரா.வரதராசன் கொலை செய்யப்படவில்லை: போலிஸ்
![]() | |
| உ.ரா.வரதராசன் |
திங்கள் இரவு வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பொன்றில், வரதராசனின் உள்ளுறுப்புக்களில் நச்சுத்தன்மையுள்ள பொருள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.














தமிழோசை







0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’