வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 மார்ச், 2010

புலிகளுக்குப் பயந்து வெளியூர் விஜயங்கள் கைவிடப்பட மாட்டாது -அமைச்சர் ரம்புக்வெல்ல!

புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி வெளிநாட்டு பயணங்களை கைவிட முடியாது என பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மேற்குலக நாடுகளில் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கு அஞ்சி பயணங்களை ரத்துச் செய்யமுடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
புலிகளை படையினர் இல்லாதொழித்துள்ளனர். எனினும் புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தொடர்கின்றன. குறிப்பாக புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் அரசாங்க அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனினும், வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு விஜயங்கள் கைவிடப்பட மாட்டாது எனவும் அவர் கூறியுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’