மூன்றாவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியை விளயாட்டரங்குகளில் பார்ப்பதற்கான டிக்கெட் விற்பனை மும்பையில் நேற்று தொடங்கியது. இதனை தெண்டுல்கர் நேற்று அறிமுகம் செய்து வைத்தார்.
இதன்போது தெண்டுல்கர் கையெழுத்திட்ட டிக்கெட் ஏலம் விடப்பட்டது. டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.5 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இந்த டிக்கெட் ரூ.11 லட்சத்துக்கு ஏலம் போனது.
இந்தத் தொகை தெண்டுல்கரின் ஆதரவுடன் நடத்தப்படும் அன்பாலயா அறக்கட்டளைக்கு வழங்கப்படும்.
"அன்பாலயா அறக்கட்டளைக்கு நீண்ட நாட்களாக ஆதரவு அளித்து வருகிறேன். சமுதாயத்தில் கீழ்மட்டத்தில் உள்ள சிறுவர்களின் திறமையை வெளிக்கொணருவதற்கு நல்ல அடித்தளம் அமைத்து கொடுக்கும் நோக்கில் அறக்கட்டளைக்கு நிதி திரட்டப்பட்டு வருகிறது" என்று தெண்டுல்கர் தெரிவித்தார்.
ஒருநாள் போட்டியில் இரட்டை சதம் அடித்த போது பயன்படுத்திய பேட்டை, அறக்கட்டளைக்கு அளிப்பதாகவும் தெண்டுல்கர் தெரிவித்தார்.
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’