
இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் அகதிகள் தொடர்பான ஐக்கிய நாடுகளிகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயத்தின் வழிகாட்டல்களில் மீளாய்வு செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அகதி அந்தஸ்து குறித்த ஐக்கிய நாடுகளின் மீளாய்வின் பின்னர் அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரும் பலருக்கு, அந்த சந்தர்ப்பம் கிடைக்கப் பெறாதென அந்நாட்டு ஊடகமொன்று எதிர்வு கூறியுள்ளது.
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட இரண்டு நாடுகளினதும் அகதிகள் தொடர்பான வழிகாட்டல்களை திருத்தியமைப்பதில் ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் கூடுதல் சிரத்தை எடுத்துக்கொள்வதாகத் தெரிவிக்கப்படுகிறது.
பெருமளவான அகதிகள் அவுஸ்திரேலியாவை நோக்கி செல்வதால் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்பில் மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொள்ளும் நிலைக்கு ஐ.நா தள்ளப்பட்டுள்ளதாகவும், இலங்கை மற்றும் ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை தரமிறக்கவுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அதிகளவிலான அகதிகள் அண்மையில் அவுஸ்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும், கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் 700 இலங்கை அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் உள்துறை அமைச்சுப் பேச்சாளர் பிரன்டன் ஓ கோர்னர் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’