தனது செல்ல நாய் கூஃபி இறந்த சோகம் தாளாமல் ஒரு நாள் முழுக்க அழுது புலம்பினார் நமீதா. அதற்கு மேல் சென்னையில் இருக்கப் பிடிக்காததால் நேற்று மாலை கிளம்பி மும்பை சென்றார். நமீதா சூரத்திலிருந்த போது வளர்த்த நாய் இந்த கூஃபி. சென்னையில் அவர் குடியேறியதும் தன் செல்ல நாயையும் கூடவே அழைத்து வந்துவிட்டார். சில மாதங்களுக்கு முன் இந்த நாய்க்கு வாத நோய் தாக்கிவிட, உயர்தர சிகிச்சை அளித்து வந்தார் நமீதா. ஆனாலும் நேற்று கூஃபி இறந்துவிட்டது. இதனால் பெரும் சோகத்துக்கு ஆளான நமீதா, நேற்று முழுவதும் யாருடனும் பேசாமல் அழுது கொண்டே இருந்தாராம். பின்னர் படப்பிடிப்பையல்லாம் கேன்சல் செய்துவிட்டு, மும்பையிலுள்ள தனது பெற்றோரைப் பார்க்க கிளம்பிச் சென்றார். “கூஃபி இறந்ததை என்னால் தாங்க முடியவில்லை. எனவே கொஞ்ச நாளைக்கு மன ஆறுதலுக்காக அம்மா அப்பாவிடம் இருக்கப் போகிறேன்” என்றார் நமீதா!
-














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’