வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 7 மார்ச், 2010

செய்தியறிக்கை


கார்டன் பிரவுன்
கார்டன் பிரவுன்

ஆப்கானிஸ்தானில் கார்டன் பிரவுன்

இராக் போர் தொடர்பான விசாரணையில் பிரிட்டன் பிரதமர் கார்டன் பிரவுன் அளித்த சாட்சியம் தொடர்பில் பெரும் சர்ச்சை நிலவும் நிலையில், அவர் ஆப்கானிஸ்தானில் இருக்கின்ற பிரிட்டிஷ் துருப்புகளை சந்தித்துள்ளார்.

தெற்கு ஆப்கானிஸ்தானில் பிரிட்டிஷ் படையினரை சந்தித்த அவர், மிக விரைவில் சாலையோர குண்டுகளில் இருந்து பாதுகாக்கும் ரோந்து வாகனங்கள் அவர்களுக்கு கிடைக்கும் என கூறினார்.

இதற்கிடையே, பிரிட்டனில், போருக்கான ஆயுதங்கள் தொடர்பான எந்த ஒரு கோரிக்கையையும் நிதியமைச்சர் என்ற முறையில் தான் நிராகரிக்கவில்லை என்று விசாரணையில் கார்டன் பிரவுன் சாட்சியம் அளித்துள்ளார். ஆனால் இது குறித்து இரண்டு முன்னாள் பிரிட்டிஷ் தளபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இந்த விஷயம் மிகவும் விவகாரமானது, ஏனென்றால் பொருத்தமான ஆயுதங்கள் இல்லாத காரணத்தால் தான் பல பிரிட்டிஷ் படையினர் பலியாகியதாக அவர்களது குடும்பத்தார்கள் சொல்லி வருகின்றனர்.


ஐஸ்லாண்டில் மக்கள் வாக்கெடுப்பு

திவாலான ஐஸ்சேவ்
திவாலான ஐஸ்சேவ்

ஐஸ்லாண்டை சேர்ந்த ஐஸ்சேவ் வங்கி திவாலானதை தொடர்ந்து பிரிட்டன் மற்றும் நெதர்லாந்துக்கு ஐந்து பில்லியன் டாலருக்கும் அதிகமான தொகையை செலுத்துவதா வேண்டாமா என்பது தொடர்பான மக்கள் வாக்கெடுப்பு ஐஸ்லாண்டில் நடைபெற்று வருகிறது.

இந்த வங்கியில் ஏராளமான பிரிட்டிஷ் மற்றும் நெதர்லாந்து மக்கள் முதலீடு செய்திருந்தனர். பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காக அந்த அரசுகள் உதவி திட்டங்களை செயற்படுத்தியிருந்தன. அந்த திட்டங்களை நடத்தியதற்கான பணத்தை தர வேண்டும் என்று இந்த அரசுகள் கோருகின்றன.

ஆனால் ஏற்கனவே பணத்தை தர ஐஸ்லாண்ட் அரசு ஒப்புக் கொண்டுள்ளதால், இந்த மக்கள் வாக்கெடுப்பு வெறும் சம்பிரதாயம் என்றே பெரும்பாலான ஐஸ்லாண்ட் மக்கள் கருதுகின்றனர்.


கிறிஸ்துவர்களை புண்படுத்துவத்து நோக்கமல்ல- மலேசிய பதிப்பகம்

மலேசியாவில் சர்ச்சை
மலேசியாவில் சர்ச்சை

மலேசியாவில் ரோமன் கத்தோலிக்கர்கள் போல வேடமிட்டு தேவாலயத்துக்கு சென்று புனித அப்பம் பெற்று கொண்ட செய்தியாளர்களின் பதிப்பகம் மன்னிப்பு கோரியுள்ளது.

முஸ்லிம்கள் முறைகேடாக கிறிஸ்துவ மதத்துக்கு மாறுகிறார்களா என்பது குறித்து ஆராயச் சென்ற செய்தியாளர்கள், புனித அப்பத்தை வாங்கி அதை வாயில் இருந்து துப்பியதாக வெளியிடப்பட்ட செய்தி கிறிஸ்துவர்களின் மனதை புண்படுத்துவதற்காக அல்ல என அல் இஸ்லாம் என்ற அந்த பதிப்பகம் தெரிவித்துள்ளது.

இந்த செய்தியாளர்கள் மீதான விசாரணை கைவிடப்பட்டதைத் தொடர்ந்து கிறிஸ்துவர்கள் புகார் செய்ய ஆரம்பித்துள்ளனர்.

பல்வேறு மதங்களை சேர்ந்த மக்கள் வசிக்கும் மலேசியாவில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ளனர். கடந்த சில மாத காலமாக இங்கு மத தொடர்பான சர்ச்சைகள் இடம்பெற்று வருகின்றன.


பர்மாவில் தொழிற்சாலை ஊழியர்கள் வேலைநிறுத்தம்

பர்மா வரைப்படம்
பர்மா வரைப்படம்

பர்மாவில், தொழிற்சாலை ஊழியர்கள் மூவாயிரம் பேர் குறைந்தளவு சம்பளத்தொகை மற்றும் அடிமட்டமான தொழில் நிலைமைகள் குறித்து முறைப்பாடு செய்யும் முகமாக பல மணித்தியாலங்களாக வேலை செய்வதை நிறுத்தியுள்ளனர்.

பர்மாவின் பிரதான நகரமான ரங்கூனில் உள்ள தென் கொரியாவுக்குச்’ சொந்தமான நான்கு ஆடையுற்பத்தி நிலையங்களில் இந்த எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தப் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்குவதாக இராணுவ ஆட்சி அதிகாரிகள் வழங்கிய உறுதி மொழிகளையடுத்து இந்தப் போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

அண்மைக் காலம் வரை, பர்மாவில் இவ்வாறான போராட்டங்கள் சாத்தியமற்றவையாகவே இருந்தன.

ஆனால் கடந்த மாதத்தில் மட்டும் குறைந்தது பத்து வெளிநாட்டு நிறுவனங்களில் இவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.


பான் கீ மூன்
பான் கீ மூன்

ஐ.நா தலைமை செயலர் மீது இலங்கை ஜனாதிபதி மஹிந்த கடும் விமர்சனம்

இலங்கையின் மனித உரிமைகள் விவகாரம் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக ஐக்கிய நாடுகளின் தலைமைச் செயலர் பான்கீ மூன் தெரிவித்துள்ளதன் தொடர்ச்சியாக, இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ ஐக்கிய நாடுகளின் செயலரை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இவ்வாறான குழுவொன்றின் எவ்வகையான நியமனமும் இலங்கையை ‘அவசியமானதும் பொருத்தமானதுமான நடவடிக்கையை எடுப்பதற்கு’ தள்ளும் செயல் என்று ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

இலங்கையில் போர் நடைபெற்ற காலப்பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் குற்றச் செயல்களுக்கு எந்த வகையிலேனும் பொறுப்பேற்கப்படவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், தான் எந்தக் குற்றமும் புரியவில்லை என இலங்கை அரசாங்கம் கூறிவருகின்றது.

இலங்கையில் போர் உச்சக்கட்டத்தை அடைந்த காலப்பகுதியில் இலங்கை அரசாங்கத்தாலும் அத்துடன் தோற்கடிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட விடுதலைப் புலிகளாலும் போர்க்கால குற்றங்கள் புரியப்பட்டுள்ளதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களைப் பொறுத்தவரை, பான்கீ மூன் குறிப்பிடத்தக்களவு மென்மையான இராஜதந்திரப் போக்கையே கொண்டுள்ளார்.

இலங்கை இராணுவத்தினர் நிராயுதபாணிகளாக உள்ளவர்களை சுட்டுக் கொல்வதைக் காட்டுவதாக வெளியான வீடியோ காட்சிகள் குறித்து பக்கச்சார்பற்ற சுதந்திரமான விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென, சட்டத்துக்குப் புறம்பான கொலைச்சம்பவங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகள் செயலரின் விசேட பிரதிநிதி பிலிப் அல்ஸ்ட்டன் கோரிக்கை விடுத்திருந்த போது, அல்ஸ்ட்டன் சுதந்திரமாக செயற்படுகின்றார் என பான்கீ மூன் தெரிவித்திருந்தார்.

இலங்கையில் நடைபெற்றிருக்கக்கூடிய மனித உரிமை மீறல்களுக்கு பொறுப்பேற்கச் செய்யும் விடயங்கள் தொடர்பில் தனக்கு ஆலோசனை வழங்குவதற்காக நிபுணர்கள் குழுவொன்றை அமைக்கவேண்டியுள்ளதாக ஐநாவின் தலைமைச் செயலர் இலங்கை அரசிடம் கூறியுள்ளதாக பான்கீமூனின் பேச்சாளர் தற்போது குறிப்பிட்டுள்ளார்.

இது பற்றி அறிவிக்கப்பட்டவுடனயே தாமதமின்றி கருத்து வெளியிட்டுள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ஸ, இந்த திட்டத்தை அடிப்படையற்றதுடன் நியாயமற்றது என விமர்சித்துள்ளார்.

இவ்வாற நடவடிக்கை எதுவும் போரினால் பாதிக்கப்பட்ட மற்றைய நாடுகள் தொடர்பில் எடுக்கப்படவில்லையெனவும் இலங்கை மீதான மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்கள் சில அரச சார்பற்ற நிறுவனங்களாலும் விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களாலுமே சுமத்தப்பட்டுவருவதாகவும் மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அரசுதுறைச் செயலகத்தினால் கடந்த அக்டோபரில் பட்டியல்படுத்தப்பட்டுள்ள உரிமை மீறல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் குறித்து இலங்கையில் ஏற்கனவே குழுவொன்று ஆராய்ந்துக்கொண்டிருப்பதாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையில் மூன்று தசாப்தங்கள் வரை நீடித்த இனப்பிரச்சனைப் போர், அங்கு மனித உரிமைகளுக்கு பெரும் சாபக்கேடாகியுள்ள நிலையில், இந்தப் பிரச்சனைகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படும் போதெல்லாம் தற்போதைய அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களைப் போலவே அதிகளவில் உணர்ச்சிவசப்பட்டு எதிர்வினையாற்றுகின்றது.

அங்கு இடம்பெற்றிருக்கக்கூடிய போர்க்கால குற்றங்கள் பற்றிய முறைப்பாடுகளுக்கு பதிலளிக்கும் வகையில் அரசாங்கம் நடவடிக்கைகளை எடுக்குமென ஐ.நாவும் இலங்கை அரசும் கடந்த மே மாதத்தில் வெளியிட்ட கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால் அரசாங்கம் அதன்படி செயற்படவில்லையென்பது இலங்கை அரசு மீதான விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.


இலங்கைக்கு இந்திய வெளிவிவகாரச் செயலாளர் விஜயம்

கோப்பு படம்
கோப்பு படம்

இந்தியாவின் உயர் இராஜதந்திர அதிகாரிகளில் ஒருவரும் வெளிவிவகாரச் செயலாளருமான நிரூபமா ராவ், இலங்கைக்கான தனது மூன்று நாள் விஜயத்தின் போது அந்நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள் பலரையும் சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.

இந்த சந்திப்புக்களின் உள்ளடக்கம் தொடர்பில் ஓரளவுத் தகவல்களே உள்ள நிலையில், இலங்கையில் சிறுபான்மைத் தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுத்திட்டம் ஒன்றை வழங்குவது குறித்து இந்தியாவிடமிருந்து இலங்கைக்கு குறிப்பிடத்தக்களவு அழுத்தங்கள் கொடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவின் போட்டி நாடான பாகிஸ்தானுடன் சில இணக்கப்பாடுகளை மீளக்கட்டியெழுப்புவது தொடர்பில்
நிருபமா ராவ் கடந்த வாரத்தில் பெரும் பிரயத்தனத்தில் ஈடுபட்டிருந்தார்.

ஆனால் அவரது இலங்கைக்கான விஜயம் அதனுடன் முற்றிலும் மாறுபட்ட விடயத்துடன் தொடர்புபட்டுள்ளது.

கடந்த வருடத்தில் விடுதலைப் புலிகளை இராணுவரீதியில் அடக்குவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட உத்திகள் விடயத்தில் விமர்சனங்களைக் கொண்டிருந்த மேற்குலத்திடமிருந்து வந்த இராஜதந்திர ரீதியிலான அழுத்தங்களை இலங்கை கடுமையாகப் புறந்தள்ளியது.

ஆனால் இந்தியாவிடமிருந்து வந்த அழுத்தங்கள் சற்று மென்மையாகவே இருந்துவந்ததுடன் இலங்கை அரசாங்கத்தினால் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருந்தன.

இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து சமூகங்களும் ஏற்றுக்கொள்ளக்கூடிய அரசியல் தீர்வுத்திட்டத்தை தனது அண்டை நாடு அடையவேண்டும் என இந்தியா அழுத்தம் கொடுத்துவருவதாக அந்நாட்டு வெளிவவகார அமைச்சர் எஸ்.எம் கிருஸ்ணா கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தார்.

இலங்கையில் மீளத் தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ,இவ்வாறான தீர்வுத்திட்டம் பற்றி அதேவகையான உறுதியற்ற பட்டும் படாத போக்கையே கடைப்பிடித்துவருகின்றார்.

இலங்கையில் போருக்குப் பின்னரான மீள்க்கட்டுமானப்பணிகளில் சீனா பெருமளவு முதலீடுகளை மேற்கொண்டு வருகின்றது.

எனவே இந்த உயர்மட்ட பேச்சுக்களின் போது இந்தியா இலங்கைக்கிடையிலான இருதரப்பு கட்டுமானத் திட்டங்கள் பற்றியும் கவனம் செலுத்தப்படலாம் எனவும் பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.


நித்தியானந்தா மீது புதிய பல புகார்கள்

நித்தியானந்தா
நித்தியானந்தா

கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்திவரும் பிரபல சாமியார் நித்தியானந்தா தொடர்பான வீடியோவை தான் எடுத்ததாக கூறும் தர்மானந்தா என்கிற லெனின் சனிக்கிழமை சென்னை காவல்துறையிடம் இது தொடர்பில் புகார் ஒன்றை அளித்திருக்கிறார்.

நித்தியானந்தாவின் சீடராக தாம் இருந்ததாகவும், அவருடைய பாலியல் நடவடிக்கைகள் பிடிக்காததால், அவரின் திரைமறைவு நடவடிக்கைகளை உலகுக்கு எடுத்துக்காட்டி மேலும் பலர் நித்தியானந்தாவிடம் ஏமாறாமல் தடுக்கும் நோக்கத்தில் இந்த வீடியோவை ரகசியமாக எடுத்ததாகவும் அவர் கூறியிருக்கிறார்.

அவர் அளித்திருக்கும் புகார் குறித்து சென்னை மாநகர காவல்துறை ஆணையர் டி ராஜேந்திரன் அவர்கள் தமிழோசைக்கு அளித்த சிறப்புச்செவ்வியை நேயர்கள் இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’