இலங்கையில் முதல் தடவையாக பெருமளவிலான ஹெரோய்ன் போதைப்பொருள் தொகை நேற்றையதினம் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
40 கிலோ 812 கிராம் மற்றும் 700 மில்லிகிராம் நிறையைக்கொண்ட மேற்படி ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப்பிரிவினரால் சிலாபம் நல்லதரன்கட்டுவ பிரதேசத்திலேயே கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் பெறுமதி 24 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் கடந்த பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி கற்பிட்டி பிரதேசத்தில் 30 கிலோ கிராம் நிறையைக்கொண்ட ஹெரோய்ன் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டிருந்தது. இந்தநிலையில் இதன் போது கைதுசெய்யப்பட்டவர் வழங்கிய தகவலின் அடிப்படையிலேயே இன்று 40 கிலோ நிறையைக்கொண்ட போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.














0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’