-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 1 மார்ச், 2010
அரசியல் தீர்வுதிட்டத்தை வென்றெடுக்க தமிழ்கட்சிகள் ஒன்றுபடுவது அவசியம்- புளொட் சித்தார்த்தன்!
தமிழ் பேசும் மக்களுக்கான உரிய அரசியல் தீர்வுதிட்டத்தை வென்றெடுக்க அனைத்து தமிழ் அரசியல் கட்சிகளும் முரண்பாடுகளை களைந்தெறிந்து செயற்பட வேண்டிய மிகவும் இக்கட்டான சூழ்நிலையிலேயே பொது தேர்தலை எதிர்கொண்டுள்ளோம் என்று ஜனநாயக மக்கள் விடுதலை (புளொட்) தலைவரும் வன்னிமாவட்ட முதன்மை வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
வவுனியா வேப்பங்குளத்திலுள்ள புளொட் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வர்த்தகப் பிரதிநிதிகளுடான சந்திப்பில் கலந்து கொண்ட சித்தார்த்தன் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், வன்னி பெரும் யுத்தத்தினால் மிகப்பெரும் அவலங்களை எதிர்கொண்ட எமது மக்கள் முழுமையாக மீள்குடியேற்றப்படாத நிலையில் இடம்பெயர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களின் மீள் குடியேற்றம் துரிதமாக முன்னெடுக்கப்பட்டு அவர்களும் சுதந்திரமாக வாக்களிக்கும், சுதந்திரமாக அச்சமற்ற சூழலில் வாழும் நிலைமை உருவாக்கப்பட வேண்டும்.
புனர்வாழ்வு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறுவர் போராளிகளுக்கு புனர்வாழ்வளித்து அவர்களின் குடும்பத்தினருடன் இணைக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட வேண்டும். இல்லையேல் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்படும்.
தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வுத்திட்டத்தை வென்றெடுப்பதன் மூலமே வடக்கு,கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தியையும் கட்டியெழுப்ப முடியும்.
தமிழ் மக்களை பிரதிநிதிப்படுத்துவப்படுத்தும் தமிழ் அரசியல் கட்சிகள் பல்வேறு தளங்களில் நின்று எதிர்வரும் பொது தேர்தலில் போட்டியிட்டாலும் எமது மக்களுக்கான அரசியல் உரிமைகளை வென்றெடுக்க அனைத்து தரப்பினரும் ஒன்றுபடுவது அவசியமாகும். இதற்கான குறிக்கோளுடன் புளொட் தொடர்ந்தும் செயற்படுமெனவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’