வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 15 மார்ச், 2010

சரத் பொன்சேகாவை பலர் மறந்து விட்டனர்: அனோமா பொன்சேகா

சரத் பொன்சேகாவுக்கு கடந்த ஜனாதிபதி தேர்தலில் ஆதரவு வழங்கிய சில கட்சிகள், தற்போது அவரை மறந்துவிட்டதாக சரத் பொன்சேகாவின் மனைவி, அனோமா பொன்சேகா தெரிவித்துள்ளார்
.
தற்போது சரத் பொன்சேகா வேறொரு கட்சியில் இருக்கம் போது, அவரது விடுதலை தொடர்பில் எதுவும் செய்ய முடியாது என ஐக்கிய தேசிய கட்சி கூறிவரும் நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் குறிப்பாக எந்த கட்சியும் சரத் பொன்சேகாவை விடுவிப்பது தொடர்பில் அக்கறை கொள்ளவில்லை என உறுதியாக தெரிவிக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் மேலும் சில கட்சிகள் தம்மிடம் சரத் பொன்சேகா தொடர்பில் விசாரிக்கவில்லை எனவும், இதனை தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னர் அனைத்து தரப்பினரும் தமக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு சரத் பொன்சேகாவின் நிலவரம் குறித்து விசாரித்து வந்ததாகவும், ஆனால் தற்போது அவர்களின் வேலைப்பழு நிமித்தம் அவ்வாறு யாரும் விசாரிப்பதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’