வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 6 மார்ச், 2010

அனோமா பொன்சேகா தனது கணவரின் சார்பில் நாடு முழுவதிலும் தோ்தல் பிரசாரம்


ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாரியார் அனோமா பொன்சேகா, தமது கணவரின் சார்பில் நாடு முழுவதிலும் பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு - கிழக்கு உள்ளிட்ட நாட்டின் சகல பாகங்களிலும் தேசிய ஜனநாயக கூட்டமைப்பினால் நடத்தப்படும் தோ்தல் பிரசாரக் கூட்டங்களில் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமது கணவரின் சார்பில் தாமே பிரசாரங்களை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நீதி, நேர்மை மற்றும் நியாயத்தை நாட்டில் நிலைநாட்டும் நோக்கில் தாம் செயற்பட உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’