
இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மெதுவாக செயற்படுவதற்கு ஐ.நா. அங்கத்துவ நாடுகளின் அழுத்தமே காரணம் என ஐக்கிய நாடுகளுக்கான பிரெஞ்சு தூதுவர் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார்.
ஐ.நா. வின் அரசியல் விவகார ஆலோசகர் லீன் பஸ்கோ இவ்வாரம் இந்தியாவுக்கும் இலங்கைக்கும் விஜயம் செய்கிறார். ஆனால் அவர் இலங்கைக்கு வரவில்லை என்பதை சுட்டிக்காட்டிய இன்னர் சிற்றி பிரஸ், பான் கீ மூனின் தாமதமான செயற்பாட்டுக்கு என்ன காரணம் என நேற்றுமுன்தினம் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும்போதே ஜெரார்ட் அரூட் இவ்வாறு கூறியுள்ளார்.
இவ்விடயத்தில் இந்தியாவின் பெயரை ஆரூட் முதலில் குறிப்பிட்டார். அடுத்ததாக சீனாவின் பெயரை குறிப்பிட்டார் என இன்னர் சிற்றி பிரஸ் தெரிவித்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வின் அரசாங்கத்தினால் இலங்கையின் வடபகுதியில் மேற்கொள்ளப்பட்ட இராணுவ நடவடிக்கையை பயங்கரவாதத்தை ஒடுக்கும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாக பிரான்ஸ் கருதியதாகவும் ஜெரார்ட் ஆரூட் தெரிவித்துள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’