இலங்கையின் வடக்கே யாழ்ப்பாணத்தில் நடைபெற்றுவரும் வர்த்தகக் கண்காட்சியில் பெருமளவிலான உள்ளூர் மக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
தென்னிலங்கை வர்த்தகர்களுக்கும் யாழ்குடாநாட்டு விற்பனையாளர்கள் மற்றும் சிறு
கைத்தொழிலாளர்களுக்கும் இடையிலான ஒத்துழைப்பை ஊக்குவிக்கும் முயற்சியாக இந்தக் கண்காட்சி நடைபெற்றுவருகின்றது. வேம்படி மகளிர் உயர்பாடசாலையிலும் யாழ் மத்திய கல்லூரியிலும் மூன்று தினங்களாக நடைபெறும் இந்தக் கண்காட்சியில் தென்பகுதி நிறுவனங்கள் மற்றும் யாழ்குடாநாட்டு கைத்தொழிலாளர்களின் உற்பத்திப் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன.
தென்னிலங்கை மற்றும் யாழ்ப்பாண வர்த்தகர்களுக்கிடையில் உறவுப் பாலமொன்றை கட்டியெழுப்புவதே இந்த கண்காட்சியின் நோக்கம் என யாழ் வர்த்தகர்கள் சங்கத்தின் செயலாளர் இராசையா ஜனக்குமார் தமிழோசையிடம் தெரிவித்தார்.
இருதரப்பு வர்த்தகர்களுக்கிடையிலான ஒத்துழைப்புக்களும் தொடர்புகளும் யாழ் மாவட்டத்தின் பொருளாதார முன்னேற்றத்துக்கு உந்து சக்தியாக அமையும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’