வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 மார்ச், 2010

பொதுவான குற்றவாளியை விட மோசமாக நடத்தப்படுகிறேன்” : சரத் பொன்சேகா


பொதுவான குற்றவாளியை காட்டிலும் தாம் மோசமாக நடத்தப்படுவதாக கொழும்பில் உள்ள கடற்படைத்தளத்தில் கடந்த 6 வார காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.
இலங்கையின் ஆங்கில செய்திதாள் ஒன்று, அனுப்பிய கேள்விக்கொத்துக்கு சரத் பொன்சேகா அனுப்பியுள்ள பதிலில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.
கடற்படைத்தளத்தில் சரத் பொன்சேகா, சொகுசான அறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ள நிலையிலேயே சரத் பொன்சேகாவின் இந்தக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

தாம், ஜனநாயகத்திற்காகவும் திறமையான நிர்வாகத்திற்காகவும் போராடியமைக்காக நான்கு சுவர்களுக்குள் அடைப்பட்டு கிடப்பதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
தாம், பொதுவான ஒரு குற்றவாளியை விட மோசமாக நடத்தப்படுவதாக குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, தாமே, மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி எனவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையில் முறையற்ற தேர்தல் முறைமையினால் ஜனநாயகம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தற்காலிகமானது.
இதனை கருத்திற்கொண்டே தாம் உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
திறமையான நேர்மையான இராணுவப்படையின் மூலம் தாம், நாட்டில் இருந்து பயங்கரவாதத்தை தோற்கடித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், தாம் தம்மை வீரனாக கருதியதாக சரத் பொன்சேகா கூறியுள்ளார்.
இதனையடுத்து அரசியலமைப்பு உரிமையின்படி படையில் இருந்து விலகி, அரசியலி;ல் பிரவேசித்ததாக குறிப்பிட்டுள்ள அவர், எனினும் ஜனநாயகமற்ற முறையொன்று தமக்கு எதிராக தோற்றுவிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தியுள்ளார்.
தமது இந்த கருத்துக்களை சிங்களத்திலும் தமிழிலும் மொழிமாற்றம் செய்து வெளியிடுமாறும் அவர் கேட்டுள்ளார்.
இதேவேளை தமது தடுத்து வைப்பு குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூனுக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் சரத் பொன்சேகா தமது பதிலில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’