வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 31 மார்ச், 2010

பென்னாகரம்! ''அதிமுகவுக்கு எச்சரிக்கை''


பென்னாகரம் இடைத்தேர்தல் முடிவு பிரதான எதிர்க்கட்சி அதிமுகவுக்கு விடப்பட்ட ஒரு எச்சரிக்கை என்று கூறுகிறார் பத்திரிகையாளரும் அரசியல் விமர்சகருமான சோ ராமசாமி அவர்கள்.
இடைத்தேர்தலில் ஆளும் திமுக வெற்றி பெறும் என்பது எதிர்பார்த்த ஒன்றுதான் என்று கூறிய அவர்,
பணபலத்தை பயன்படுத்தி வெற்றி பெறுவது என்பது தமிழகத்தில் ஒரு புதுத் தேர்தல் முறையாக அங்கீகரிக்கப்பட்டுவிட்டது என்றார்.
அதிமுக தலைவி ஜெயலலிதா
அதிமுக தலைவி ஜெயலலிதா
ஆனால், எதிர்க்கட்சியான அனைத்திந்திய அண்ணா திமுக மூன்றாவது இடத்துக்கு தள்ளப்பட்டு , டெபாசிட் தொகையும் பறிகொடுத்திருப்பது அதிர்ச்சியைத் தரவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், பென்னாகரம் தொகுதியியில் பாட்டாளி மக்கள் கட்சி சாதி வாக்குகளை மையப்படுத்தியது ஒரு முக்கிய காரணம்.
இந்தத் தோல்வி அதிமுகவின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என்று கூறமுடியாது ஆனால் இது அந்தக்கட்சிக்கு ஒரு கடுமையான எச்சரிக்கை. வலுவான கூட்டணியை அது அமைக்கவேண்டும் என்பது முக்கியம் என்றார்.
திமுக மாநிலத்தில் ஆட்சியை மீண்டும் பிடித்த கடந்த சில ஆண்டுகளில், அதிமுக எதிர்க்கட்சியாக துடிப்புடன் நடந்துகொள்ளவில்லை , அதன் காரணமாக கட்சியின் தொண்டர்களிடையே மனோதிடம் குறைந்திருக்கிறது என்று வரும் விமர்சனங்கள் குறித்து பதிலளித்த அவர், கட்சி தோல்வியுறும்போது இது போன்ற விமர்சனங்கள் எழுவது இயற்கை, அதிமுகவுக்கு இப்போதைய தேவை, கூட்டணியை குறித்து சிந்திப்பது, பணபலத்தை எதிர்கொள்வது என்றார்.
திமுக தலைவர் கருணாநிதி
திமுக தலைவர் கருணாநிதி
பாட்டாளி மக்கள் கட்சி இரண்டாவது இடத்தை பெற்றிருப்பது வரும் தேர்தல்களில் அதன் பேரம்பேசும் சக்தியை அதிகப்படுத்தும் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், இந்த ஒரு தொகுதியின் முடிவை மட்டும் வைத்து , பாமகவின் பலத்தை யாரும் எடை போட மாட்டார்கள் என்றார்.
ஆனால், திமுகவின் வெற்றிக்கு, வெறும் பண பலம் மட்டுமே காரணம் என்று சொல்லிவிட முடியுமா, தொடர்ந்து இடைத்தேர்தல்களில் வெற்றி பெற்றுவருவது, மக்கள் அதன் செயல்பாடு மீது கொஞ்சமாவது திருப்தியுடனிருக்கிறார்கள் என்பதைக் காட்டவில்லையா என்று கேட்டதற்கு பதிலளித்த அவர், கூட்டணி பலம் மற்றும் பணபலம் இல்லாமல் ஒரு தேர்தல் நடந்தால் அதை வைத்துத்தான் இதற்கு பதிலளிக்க முடியும் என்றார்.
தேர்தல் பிரச்சாரங்களில் கட்சித் தலைவர்கள்
தேர்தல் பிரச்சாரங்களில் கட்சித் தலைவர்கள்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’