வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 மார்ச், 2010

தனுனவின் தாயார் அசோகா திலகரட்ன மீதான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றது

அன்னிய செலாவணி சட்டத்தை மீறி, நிதி திரட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள தனுன திலகரட்னவின் தாயான அசோகா திலகரட்னவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டிருந்த மனு இன்று கல்கிஸை நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது, குறித்த மோசடி நிதியை இராஜகிரியவில் உள்ள பரனலியனகே தொன் சஞ்சீவ குமார என்பவரிடம் இருந்து அசோகா திலகரட்னவிற்கு பரிமாறப்பட்டதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் நீதிமன்றில் தெரிவித்தனர்.

தற்போது அவர் வெளிநாடு ஒன்றில் வசிப்பதாகவும், அவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாருக்கு வேண்டுகோள் விடுக்குமாறும் அவர்கள் கோரினர்.

இந்தநிலையில் குறித்த கோரிக்கைக்கு நீதிபதி இணக்கம் தெரிவித்ததாக அங்கிருக்கும் எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்த நிதி பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் ஜீப் வாகனம் ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.

இந்த வாகனத்தை இராணுவத்தினரிடம் இருந்து குத்தகைக்கு எடுப்பதற்காக, போலியான ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

சரத் பொன்சேகாவின் மருமகனின் தாயாரான அசோகா திலகரட்னவின் வங்கிக் கணக்கில் இருந்து, குற்றப் புலனாய்வுத் துறையினர் அண்மையில் 75 மில்லியன் நிதியை கைப்பற்றி இருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’