கடைகளைச் சூறையாடியவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் |
சிலியில் பூகம்பத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு உதவிகள் விரைவதாக தகவல்
சிலி நாட்டில் பாரிய பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு பெரும் அளவிலான உதவி முயற்சிகள் சென்றுகொண்டிருப்பதாகவும், அங்கு பாதுகாப்பு நிலைமைகள் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாகவும், அந்த நாட்டின் அதிபர் மிஷேல் பாச்லட் கூறியுள்ளார்.
பெரும் அளவிலான சூறையாடல்கள் இடம்பெற்ற, மிகவும் மோசமாக பூகம்பத்தின் அழிவுகளுக்கு உள்ளான கொண்செப்சியன் பகுதியில் அமைதியைக் கோரியுள்ள அவர், அந்தப் பகுதியில் உதவிகளை விநியோகிக்கவும், ஒழுங்கு நிலையைக் கொண்டு வருவதற்கும் அங்கு பதினோராயிரத்துக்கும் அதிகமான துருப்பினர் அனுப்பப்பட்டுள்ளதாக கூறினார்.
50 விமானங்களும், பல படகுகளும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
கொண்செப்சியோன் நகருக்கான விநியோகங்கள் அங்கு சென்றடைய பல நாட்கள் எடுக்கும் என்று வழியில் உள்ள ஒரு பிபிசி செய்தியாளர் கூறுகிறார்.
700 க்கும் அதிகமானவர்கள் இதுவரை இறந்துள்ளதாக கூறப்படுகின்றது.
'உகண்டா நிலச்சரிவில் நூற்றுக்கும் அதிகமானோர் பலி'
முந்நூறுக்கும் அதிகமானோரைக் காணவில்லை என்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடுமையான மழை காரணமாக ஏற்பட்ட இந்த நிலச்சரிவு ஒரு கிராமத்தில் உள்ள ஒரு வணிக மையத்தை முற்றாக தரைமட்டமாக்கி, கடைகளையும், வீடுகளையும், ஏனைய கட்டிடங்களையும் புதையச் செய்துவிட்டதாகவும் அதிகாரிகள் கூறுகிறார்கள்.
உயிர் தப்பியவர்களை மீட்புப் பணியாளர்கள் தேடி வருகிறார்கள்.
ருவாண்டாவின் முன்னாள் அதிபரின் மனைவி பிரான்சில் கைது
அகதா ஹப்யரிமானா |
ஜுவனல் ஹபியரிமானா அவர்கள் படுகொலை செய்யப்பட்டமைதான், 16 வருடங்களுக்கு முன்னர் ருவாண்டா இனப்படுகொலை நடவடிக்கைகளுக்கு தூண்டிய நடவடிக்கையாக பார்க்கப்படுகின்றது.
1994 ஆம் ஆண்டு இனப்படுகொலைகளுக்கு திட்டமிட அகதா ஹப்யரிமானா உதவினார் என்று தற்போதைய ருவாண்டா அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. ஆனால், அவர் அதனை மறுக்கிறார்.
திருமதி ஹபியரிமானா பல வருடங்களாக பிரான்ஸில் வாழ்ந்துவருகிறார்.
அவரது கைதை வரவேற்றுள்ள ருவாண்டாவின் நீதி அமைச்சர், ஆனால், அவர் ருவாண்டாவிடம் கையளிக்கப்படுவாரா என்பது தெரியவில்லை என்றும் கூறியுள்ளார்.
நிக்கோலஸ் சர்கோசி அவர்கள் ருவாண்டாவுக்கு விஜயம் செய்த சில நாட்களின் பின்னர் இவரது கைது இடம்பெற்றிருக்கிறது.
நேபாளத்தில் ஊடக நிறுவன உரிமையாளர் சுட்டுக்கொலை
செய்தியாளர்கள் மீதான தாக்குதல்களை கண்டித்து நேபாளத்தில் போராட்டம்(ஆவணப்படம்) |
இந்துப் பண்டிகையான ஹோலிப் பண்டிகையை கொண்டாடிவிட்டு வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்த அருண் சிங்கானியா அவர்களை மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நான்கு பேர் மிக அருகாமையில் வந்து சுட்டுக்கொன்றிருக்கிறார்கள்.
உள்ளூர் மருத்துவமனை ஒன்றுக்கு கொண்டுவரப்பட்ட போது அவர், அங்கு உயிரிழந்தார்.
செய்தியாளர்கள் மீது நேபாளத்தில் நடக்கும் தாக்குதல்களில், இவரது கொலை இறுதியாக நடந்துள்ள ஒன்று என்று அங்குள்ள பிபிசி செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.
இந்திய வரைபடம் |
நாகா பிரிவினைவாதிகள் இந்தியப் பிரதமரைச் சந்தித்தனர்
இந்தியாவின் வடகிழக்கே பல ஆண்டுகளாக தனி நாகா கோரி போராடிவந்த நாகா கிளர்ச்சிக்குழுவின் தலைவர் துய்ங்கலெங் முய்வா இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசியுள்ளார்.
12 ஆண்டுகளாக மெதுவாக நடைபெற்று வந்த பேச்சுவார்த்தைகளைத் தொடர்ந்து தேசிய சோஸலிச நாகலாந்து கவுன்சில் தனது பிரிவினைவாதக் கோரிக்கையை கைவிட்டுள்ளதாக தெரிகிறது.
நாகாலாந்து பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண்பதில் தமது அமைப்பு உறுதியாக இருப்பதாக முய்வா தெளிவுபடுத்தியுள்ளார்.
இந்த சந்திப்பினைத் தொடர்ந்து துய்ங்கலெங் முய்வா தலைமையிலான குழுவினர் இந்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரத்தையும் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளனர்.
இது பற்றிய மேலதிக தகவல்களை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
‘’துணிச்சல் மிக்கப் பெண்’’ இலங்கை முஸ்லிம் பெண்ணுக்கு சர்வதேச விருது
மொகமட் மஜீத் ஜென்சிலா |
சர்வதேச மட்டத்தில் தலைமைத்துவம், பெண்ணுரிமை, பெண்களின் முன்னேற்றத்திற்காகத் துணிவுடன் சிறப்பாகப் பணியாற்றிய பெண்கள் பத்துப் பேர் இந்த விருதுக்காக வருடந்தோறும் தெரிவு செய்யப்படுகின்றார்கள். இந்த வருடம் இந்த விருது இலங்கைப் பெண்ணுக்கும் கிடைத்திருப்பதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருக்கின்றது. ஆப்கானிஸ்தான், சைப்பிரஸ், டொமினிக்கன் குடியரசு, இரான், கென்யா, கொரியா, சிரியா, சிம்பாப்வே ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் 9 பேரும் இந்த விருதுக்காகத் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றார்கள். சர்வதேச மட்டத்திலான இந்த விருது கிடைத்தமை குறித்து பெரும் மகிழ்ச்சியும் பெருமையும் அடைவதாகத் தெரிவித்த ஜென்சிலா அவர்கள், சமூக நம்பிக்கை நிதியம் என்ற நிறுவனத்தைக் கடந்த 7 வருடங்களாக நடத்தி வருவதாகக் கூறுகின்றார்.
இவர் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சொந்த இடமாகக் கொண்டவர். விடுதலைப்புலிகளினால் முஸ்லிம் மக்கள் வடபகுதியில் இருந்து வெளியேற்றப்பட்ட போது ஜென்சிலாவின் குடும்பமும் இடம்பெயர்ந்து புத்தளத்தில் தஞ்சமடைந்திருந்தது.
சந்திரனில் பெருமளவு உறைபனி கண்டுபிடிப்பு
சந்திரயாண் 1 |
டெக்சாஸில் நடந்த விண்கோள் அறிவியல் மாநாட்டில் இந்த புதிய கண்டுபிடிப்பை அறிவித்த நாசா விஞ்ஞானிகள், நிலவின் வடதுருவத்தில் இருக்கும் மிகப்பெரும்பள்ளங்களில் நீராக இருந்து உறைபனியாக மாறிய உறை பனிப்படிமங்களை தங்களின் சமீபத்திய ஆய்வு கண்டறிந்திருப்பதாக அறிவித்தனர்.
சில பள்ளங்களில் இருக்கும் உறைபனிப்பாறைகள் இரண்டு முதல் 15 கிலோமீட்டர் விட்டம் கொண்டதாக இருப்பதாகவும், இந்த பனிப்பாறைகளின் அடர்த்தி என்பது பல மீட்டர்களாக இருக்கக்கூடும் என்றும் விஞ்ஞானிகள் கணித்திருக்கிறார்கள்.
இந்த உறைபனியின் மொத்த அளவு குறைந்தது 600 மில்லியன் மெட்ரிக் டன்களாக இருக்கும் என்று கூறிய ஹஸ்டனில் இருக்கும் நிலவு மற்றும் விண்கோள் ஆய்வு மையத்தைச்சேர்ந்த முனைவர் பால் ஸ்புடிஸ் அவர்கள்,
இத்தகைய பெருமளவான உறைபனி நிலவில் கண்டுபிடிக்கப் பட்டிருப்பதன் மூலம், நிலவுக்குள் இருக்கும் இயற்கை வளங் களை கொண்டு மனிதன் தொடர்ந்து அங்கே வசிப்பதற்கான சாத்தியங்கள் அதிகரித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
நிலவு தொடர்பான ஆய்வுகளில் முக்கிய மைல்கல்லாக பார்க்கப்படும் இந்த கண்டுபிடிப்பு குறித்து இந்தியாவின் சந்திரயாண் திட்ட இயக்குநர் அண்ணாதுரை அவர்கள் தமிழோசைக்கு அளித்த செவ்வியை செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’