-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 1 மார்ச், 2010
கொட்டாஞ்சேனையில் தமிழ் வர்த்தகர் சுருக்கிட்டு தற்கொலை
கொட்டாஞ்சேனை, ஸ்ரீ குணானந்த மாவத்தையில் தமிழ் வர்த்தகர் ஒருவர் கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது வியாபார நிலையமான ஹோட்டலிலேயே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
நேற்றுக் காலை 7.30 மணியளவில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் ராஜரட்ணம் (வயது 45) எனும் மூன்று குழந்தைகளின் தந்தையே இவ்வாறு உயிழந்தவராவார்.
குறித்த வர்த்தகர் தற்கொலை செய்து கொண்ட இடத்திலிருந்து அவரால் எழுதப்பட்ட கடிதமொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ள அதேவேளை, அதில் தான் கொடுக்க வேண்டிய கடன்களை கொடுக்குமாறு எழுதப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறினர்.
இது தொடர்பில் கொட்டாஞ்சேனை பொலிஸார் தகவல் தருகையில் கூறியதாவது:
ஸ்ரீ குணானந்த மாவத்தை, இல. 25ல் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றின் உமையாளர் சுருக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக கிடைத்த தகவலுக்கமைய அங்கு சென்ற பொலிஸார் மேற்படி வர்த்தரிகன் சடலத்தை மீட்டனர்.
அத்துடன் அவரது சடலத்துக்கருகிலிருந்து கடிதமொன்றும் கைப்பற்றப்பட்டது. அதில் உள்ள கையெழுத்து உயிழந்தவருடையது என அவரது மனைவியிடம் மேற்கொண்ட விசாரணைகளின் போது தெரிய வந்தது. அத்துடன் அக்கடிதம் அவருடைய மனைவிக்காக எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான மரண விசாரணைகள் இடம்பெற்றதை அடுத்து சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அத்துடன் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் கொட்டாஞ்சேனை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’