
இலங்கையில் 50 வீதமான யுத்தம் நிறைவடைந்த போதிலும், யுத்தத்திற்கான காரணங்களுக்கு இன்னும் தீர்வு காணப்படாமலிருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுதும்பர தொகுதி அமைப்பாளர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
யுத்தம் முடிவடைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதும் 50 வீதமே அது முடிவடைந்துள்ளதாக எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் ஏற்படுவதற்கான காரணங்களான அதிகாரப்பகிர்வு, தமிழர்களுக்கான சமஉரிமை, மொழி தொடர்பான பிரச்சினை, கலாசாரம் தொடர்பான பிரச்சினை, சமயம் தொடர்பான பிரச்சினை மற்றும் அபிவிருத்திகள் என்பன இன்னும் தீர்க்கப்படவில்லை.
கடந்த தேர்தலில் வாக்களிக்க தகுதிபெற்றிருந்த சுமார் 6 லட்சம் பேரில் 2 லட்சம் பேர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளனர். அதிலும் 2 லட்சம் பேர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கோ, எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கோ வாக்களிக்கவில்லை.
இது அவர்கள், காட்டும் கோபம் எனக்கொள்ள முடியாது எனக்குறிப்பிட்ட அவர்கள் இலங்கையின் அனைத்து மக்களுடன் இணைந்திருப்பதாக எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’