வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 மார்ச், 2010

ஷாருக்கானோடு கைகுழுக்க 32 ஆயிரம் ரூபாய் கட்டணம்

ஷாருக்கான் அமரும் இருக்கை அருகே அமர்ந்து ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை பார்க்க ரூ.32 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஐ.பி.எல். போட்டிக்கு கொல்கத்தா மைதானத்தின் அதிக பட்ச நுழைவுச்சீட்டு விலை ரூ.6,500 ஆகும். அதை விட 5 மடங்கு கட்டணம் இதுவாகும். ரூ.32 ஆயிரத்துக்கு நுழைவுச்சீட்டு பெறுபவர்கள் ஷாருக்கானுடன் ஆடலாம் கை கொடுக்கலாம், 

வீரர்களுக்கு அவர் கொடுக்கும் விருந்தில் பங்கேற்கலாம். எனவும் தெரிவிக்கப்படுகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முன்பு 85 ஆயிரம் பேர் அமரலாம்.

மைதானம் சீரமைப்புக்கு பிறகு 44 ஆயிரம் இருக்கையாக குறைக்கப்பட்டது. இதன் காரணமாகவே கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரூ.32 ஆயிரம் கட்டண நுழைவுச்சீட்டு விலையை அறிமுகப்படுத்தியுள்ளது. குறைந்த பட்ச கட்டணமான ரூ.400க்கான நுழைவுச்சீட்டுக்கள் ஏற்கனவே விற்று தீர்ந்து விட்டன.

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற 12ஆந் திகதி தொடங்குகிறது. இந்தப் போட்டியில் விளையாடும் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி வீரர்களை அந்த அணியின் உரிமையாளரும், நடிகருமான ஷாருக்கான். கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்துக்கு போட்டி நடைபெறும் நாட்களில் நேரில் சென்று பார்வையிடுவார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’