.jpg)
மூன்று பிள்ளைகளின் தாயாரான 37வயதான விதவைப் பெண்ணிடம் பட்டப்பகலில் பலாத்காரமாக பாலியல் வல்லுறவு கொண்ட நபரை குற்றவாளியாகக் கண்ட மாத்தறை மேல் நீதிமன்ற நீதிபதி சிசிர குமார ரத்நாயக்க அவருக்கு 15வருட கடூழியச்சிறைத் தண்டனை விதித்ததோடு இரண்டு லட்சம் ரூபா நட்டஈடும் அப்பெண்ணுக்கு வழங்குமாறு உத்தரவிட்டார். தவிர 20ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். நட்டஈட்டை செலுத்தாது போனால் மேலும் இரண்டு வருடங்கள் கடூழியச்சிறை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். அப்பெண்ணுக்கு காயம் ஏற்படுத்தியமைக்காக 2வருட கடூழியச்சிறை தண்டனையும் 5ஆயிரம் ரூபா அபராதமும் விதித்தார். அபராதம் செலுத்தாது போனால் 1வருட சிறைத்தண்டனையும் அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். கடந்த 2007ம் வருடம் செப்டம்பர் 25ம் திகதி திககொட பொலிஸ் பகுதியில் உள்ள கரகொட உயன்கொட என்ற இடத்தில் பட்டப்பகலில் எவரும் இல்லாத சமயம் மேற்கண்ட பெண்ணின் வீட்டினுள் பலாத்காரமாக புகுந்து பெண்ணின் விருப்பத்துக்கு மாறாக குற்றம் புரிந்தார் என்று திககொட தயாபால என்பவர் மீது குற்றஞ்சாட்டி திககொட பொலிஸார் இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’