
நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்றும் அதனை ரத்துச் செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியே மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நிராகரிக்குமாறு கோரி, ஜெனரல் சரத் பொன்சேகாவின் சார்பில் உயர்நீதிமன்றில் இன்று மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதன்போது மன்றுக்கு வருகை தந்திருந்த மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க மேற்படி கருத்தினைத் தெரிவித்தார்.
"தேர்தல் முடிவுகள் நிராகரிக்கப்பட வேண்டும், அவை மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும், ஜெனரல் சரத் பொன்சேகாவையே ஜனாதிபதியாக அறிவிக்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தே நாம் மனுத்தாக்கல் செய்துள்ளோம்.
மக்களின் தெரிவுக்கு மாறாக அமைந்த ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளை நாம் எப்போதும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை. நீதிமன்றம் உரிய தீர்வினை வழங்கும் என நம்புகிறோம்" என்று அவர் மேலும் தெரிவித்தார்.
மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க ஆகியோர் உள்ளிட்ட பலர் இதன்போது வருகை தந்திருந்தனர்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’