வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 2 பிப்ரவரி, 2010

இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவி விலகல்கள் தொடர்கின்றன


இலங்கையில் ஜனாதிபதி தேர்தலின் பின்னர் பதவி விலகல்கள் தொடர்கின்றன. இதன்படி சுற்றுலாத்துறை அபிவிருத்தி சபை மற்றும், சுற்றுலா மேம்படுத்தல் சபையின் தலைவர் பெர்னாட் குணத்திலக தமது பதவியில் இருந்து இடைவிலகியுள்ளார்.

அவர் தமது அதிகாரிகளுடன் நேற்று அவசர கூட்டம் ஒன்றை நடத்தி இதனை தெரிவித்ததாக தெரிவக்கப்படுகிறது.

பேனாட் குணதிலக்க, முன்னர் சமாதான செயலக பிரதானியாக செயற்பட்டு வந்தார். அவர் ஒரு அரசியல் பதவி ஒன்று வழக்கப்படவுள்ளமையை அடுத்தே அவர் அந்த பதவியில் இருந்து விலகியுள்ளதாக தெரிவக்கப்படுகிறது.

இதற்கிடையில், இது தொடர்பில் சுற்றுலாத்துறை அமைச்சிடம் வினவிய போது, அவர் பதவி விலகியமை உண்மை. எனினும் அவர் பதவி விலகியதற்கு அரசியல் காரணங்கள் எவையும் இல்லை என தெரிவிக்கப்பட்டது.

இதேவேளை, இலங்கை தொலைதொடர்புகள் ஒழுங்கமைப்பு ஆணைக்குழுவின் தலைவரான பிரியந்த காரியபெரும இன்று தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இவர் கடந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதிக்கட்டத்தில், பொதுவேட்பாளர் சரத் பொன்சேகாவுக்கு நிதியுதவியை மேற்கொண்டதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்த நிலையிலேயே அவர் பதவி விலகியுள்ளார்.

இதற்கிடையில் அமைச்சர் ஹேமகுமார நாணயக்காரவும் அரசியலில் இருந்து ஒதுங்கப்போவதாக அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’