வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 22 பிப்ரவரி, 2010

தமிழக அரசை கண்காணியுங்கள்: காங்கிரசாருக்கு ஜி.கே. வாசன் உத்தரவு!


கோவை: தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அடித்தளமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை மாநில அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் காங்கிரசார் கண்காணிக்க வேண்டும் என்று மத்திய கப்பல் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜி.கே. வாசன் கூறினார்.

கோவை சூலூரில் முன்னாள் எம்.எல்.சி. மூத்த காங்கிரஸ் நிர்வாகி லட்சுமணன் சிலையைத் திறந்து வைத்து அவர் பேசுகையில்,

காங்கிரஸ் இயக்கத்தை வலுப்படுத்த நாம் ஒற்றுமையாக செயல்பட வேண்டும். இதற்கு கடினமாக உழைக்க வேண்டும். இதன் மூலமே மக்கள் நம்பிக்கையைப் பெற முடியும். இந்த முயற்சிக்கு இன்றே வித்திட வேண்டும்.

தமிழகத்தில் முதன்மையான இயக்கமாக காங்கிரஸ் மாற வேண்டும். நாட்டு முன்னேற்றத்துக்காக மக்கள் நலத் திட்டங்களை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

அவைகள் நாட்டு மக்களின் வாழ்க்கைத் தரம் உயர்த்தும் திட்டங்களாகும். கல்வி, விவசாயம், தொழில், சுகாதாரம் போன்றவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து மத்திய அரசு திட்டங்களை இயற்றி வருகிறது.

தமிழகத்தின் வளர்ச்சியில் மத்திய அரசு அடித்தளமாக உள்ளது. மத்திய அரசின் திட்டங்களைப் பட்டியலிட்டு அவற்றை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும். இவற்றை மாநில அரசு எவ்வாறு நடைமுறைப்படுத்துகிறது என்பதையும் காங்கிரசார் கண்காணிக்க வேண்டும் என்றார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’