-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
திங்கள், 22 பிப்ரவரி, 2010
கனடா உதயன் பத்திரிகை அலுவலகம் மீது நாடு கடந்த புலிகள் தாக்குல்!
-சர்வேஸ்வரன்
கனடாவில் இருந்து வெளிவரும் “உதயன்” பத்திரிகை அலுவலகம் மீது நாடுகடந்த புலிகள் தமது வன்முறையை மீள கட்டவிள்த்து விட்டுள்ளனர். கடந்த சிலவாரங்களாக மேற்படி பத்திரிகையை வர்த்தக நிலையங்களில் இருந்து அகற்றிய நாடுகடந்த புலிகளின் வன்முறை கும்பல், நேற்றிரவு ஸ்காபுரோ, 885 புரோக்கிரஸ் வீதியில் அமைந்திருந்த மேற்படி பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டதில், பத்திரிகை அலுவலகத்தின் கண்ணாடிகள் முற்றாக உடைந்து சேதமடைந்துள்ளன.
இலங்கையில் பத்திரிகை அடக்குமுறை தொடர்வதாக கனடாவில் இருந்து குரல்கொடுக்கும் புலிகளின் ஊடகங்கள் ஒர் வளர்ச்சியடைந்த நாட்டில் பத்திரிகை சுதந்திரத்திற்கு மதிப்பளிக்கும் நாடு ஒன்றில் வைத்து தமக்கு எதிரான அல்லது தனிநபர்களால் நடாத்தப்படும் ஊடகங்களை பயமுறுத்தி அடிபணிய வைக்கும் நடவடிக்கையை மீளவும் கனடாவில் கட்டவிள்த்து விட்டுள்ளனர்.
கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து வெளிவந்த தாயகம், மஞ்சரி, சங்கமம், கனேடிய தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் போன்ற ஊடகங்களை பயமுறுத்தியும், தாக்கியும் அச்சுறுத்தி தமக்கு ஆதரவாக எழுதவைத்தும் சிலவற்றை தடை செய்யவும் வைத்த புலிகளின் அடக்குமுறை கடந்த ஆண்டு மே மாதம் 18ம் திகதியுடன் மாற்றம் காண ஆரம்பித்தது.
இந்நிலையில் கனடாவில் பல ஊடகங்கள் வன்னியில் கோர யுத்தம் இடம்பெற்றபோது நடந்த உண்மை சம்பவங்களை மறைத்து கனடாவில் மக்களை அணிதிரட்டி வீதிமறியல், நெடுஞ்சாலை மறியல் போராட்டங்கள் என்று தமிழ் மக்களை வீதி இறக்கி நாடுகடந்த கனேடிய புலிகள் போராட்டம் நடாத்த உதவின. இவ்வாறான நிலையிலும் சில ஊடகங்கள் உண்மை செய்திகளை வெளியிட்டபோது அவை துரோகம் புரிகின்றன என்று கனடா புலிகளால் முத்திரைகுத்தப்பட்டு அந்த ஊடகங்களுக்கு எதிரான புனைகதைகள் கட்டவிள்த்து விடப்பட்டன.
ஊடகம் என்பது மக்களுக்கு உண்மையை சொல்லவேண்டும், சமூகத்தில் எங்கு தவறு இழைக்கப்பட்டாலும் அவற்றை சுட்டிக்காட்ட தயங்ககூடாது. அவ்வாறு செய்வதை சகித்து கொள்ளமுடியாதவர்களின் கைங்கரியமே ஊடகங்கள் மீதான வன்முiயாகும். 1990களில் கனடாவில் புலிகளால் ஆரம்பிக்கப்பட்ட ஊடகங்கள் மீதான வன்முறை, கடந்த ஆண்டு நமது தேசத்தில் இடம்பெற்ற மனித அவலங்கள், அழிவுகளுக்கும் மத்தியில் தொடர்வது வேதனைக்குரியது. இவற்றை ஆரம்பத்திலேயே தண்டித்திருக்க வேண்டும், அதற்கு எமது சமுதாயத்தில் வெளிவந்த ஊடகங்களின் ஒற்றுமையின்மையே இவற்றுக்கு அடித்தளமிட்டது.
ஒரு ஊடகம் மீது தாக்குதல் மேற்கொண்டால் அவை எமக்கு எதிராக மேற்கொள்ளப்படவில்லையே என்று மற்றைய ஊடகங்கள் கண்டு கொள்ளாமலும் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றால் அவ் செய்திகளை இருட்டடிப்பு செய்ததுமே ஒர் சுதந்திரமான கனேடிய மண்ணில் இருந்து உண்மையை ஊடகங்கள் எழுத முடியாத துர்ப்பாக்கிய நிலைக்கு காரணமாகியது.
ஆரம்பத்தில் தாயகம் பத்திரிகை பல்வேறு சாவல்களுக்கு மத்தியில் வெளிவந்தபோதும் அந்த பத்திரிகையை வர்த்தக நிலையங்கள் விற்க மறுத்ததும், சில வர்த்தக நிலையங்களில் வாங்கி வைத்து கொண்டு வாசகர்கள் கேட்கும்போது பத்திரிகை வரவில்லை என்று கூறி வன்முறைக்கு துணைபோனதும், மஞ்சரி ஆசிரியர் டி.பி.எஸ்.ஜெயராஜ் இரவு நேரம் புலிகளின் குண்டர் கூட்டத்தினால் தாக்கப்பட்டதும், புலிகளின் விளம்பரத்தை வெளியிட மறுத்ததன் காரணமாக சங்கமம் வானொலி அதிபர் இளையபாரதி இல்லம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்து பயமுறுத்தியது, புலிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய வர்த்தக நிலையங்களை மூட மறுத்த வர்த்தக நிலையங்களின் கண்ணாடிகளை உடைத்து நொருக்கி வர்த்தகர்களை அடிபணிய வைத்தமை போன்ற வன்முறைகள் கனேடிய மண்ணில் கட்டவிள்த்து விடப்பட்டபோது அவற்றை கண்டிக்க தயங்கியதே இவ்வளவு ஆண்டுகளாக இந்த வன்முறை கனடா மண்ணில் தொடர்வதற்கு வழியேற்படுத்தியுள்ளது.
தமிழீழம் பெற்று தருவதாக கூறி கனடாவில் வாழும் தமிழ்மக்களிடம் கொள்ளையடித்த பணத்தில் உல்லாச வாழ்வை நடாத்திவரும் நாடுகடந்த புலிகளின் வருவாய் கடந்த ஆண்டு மே மாதத்துடன் வீழ்ச்சியடைந்ததுடன் மக்கள் கேள்வி கேட்க்கவும் தொடங்கிவிட்டனர். தாயகத்தில் அப்பாவி இளைஞர்களும், யுவதிகளும் அநியாயமாக யுத்தத்தில் பலியாக்கப்பட்டபோது அந்த இளைஞர், யுவதிகளின் இழப்பில் கனடாவில் வாழும் சில புல்லூரிவிகள் மக்களிடம் நிதி சேகரித்து தமது வாழ்வை மேம்படுத்தினர். இவ்வாறான நிலையில் ஊடகங்களை பயமுறுத்தி தமது அடக்குமுறை சர்வாதிகாரத்துக்கு துணைபோக வைப்பதற்காகவே இந்த உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது.
மேற்படி பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் ஆர்.என்.லோகேந்திரலிங்கம் ஆரம்பத்தில் மலையன்பன் என்ற பெயரில் பல்வேறு கவிதைகள், கட்டுரைகளை எழுதியவர். சிறந்த சமூகபார்வையை கொண்ட உதயன் ஆசிரியர் இந்த அடக்குமுறை கூட்டத்தின் மிரட்டலுக்கு பயந்து தொடர்ந்தும் இவ்வாறு பத்திரிகை நடாத்தமுடியாது மக்களுக்கு உண்மையை எடுத்து கூற வேண்டும் என்று கருதி தனது பத்திரிகை பணியை மேற்கொண்ட நிலையிலேயே மக்களின் பணத்தில் பிழைப்பு நடாத்தும் இந்த கொள்ளை கூட்டம் உதயன் பத்திரிகை அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொண்டு ஆசிரியர் லோகேந்திரலிங்கத்துக்கு பயமுறுத்தல் விடுத்துள்ளது.
கனேடியவாழ் தமிழ் பேசும் மக்களே! தொடர்ந்தும் இவ்வாறான ஊடக அடக்குமுறை சகித்து கொள்ளமுடியாது. இதற்கு எதிராக வீதிக்கு இறங்கி போராடுவதன் மூலமே எமது இனத்தில் இருந்து எமது சமூக ஊடகங்கள் மீது விடுக்கப்படும் அச்சுறுத்தல்களிற்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும். சிங்கள அரசு மாத்திரம் எமக்கு பேச்சுரிமையை மறுக்கவில்லை. எம்மினத்தவரே எமது பேச்சுரிமையை, கருத்துரிமையை, எழுத்துரிமையை பறித்துள்ளனர் என்பதற்கு கடந்த கால சம்பவங்களுடன் இதுவும் ஒர் சிறந்த எடுத்துகாட்டாகும்.
சர்வேஸ்வரன்
-கனடா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’