வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

திங்கள், 8 பிப்ரவரி, 2010

சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார். சிறிலங்கா


சிறிலங்காவின் முன்னாள் இராணுவத்தளபதியும் ஜனாதிபதி வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா சற்று நேரத்திற்கு முன்னர் இராணுவ காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்துள்ளார்.
சிறிலங்கா இராணுவத்திற்கு எதிராக செயற்பட்டார் என்ற குற்றத்திற்காகவே ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ராஜகீய மாவத்தையில் அமைந்துள்ள காரியாலயத்தில் வைத்து பொன்சேகா கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் அவரது ஊடகப் பேச்சாளர் சேனக சில்வாவும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சரத்பொன்சேகாவை பிடரியில் பிடித்து மிகக்கேவலமான முறையில் இழுத்துச் சென்றதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். தானும் ஏனையோரும் பார்த்திருக்க மிக மோசமான முறையில் இந்த கைது இடம்பெற்றதாக அவர் கூறியுள்ளார்.

போர்க்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சர்வதேச நீதிமன்றில் சாட்சியளிக்க தான் தயார் என அவர் திங்கட்கிழமை பகல் கொழும்பில் செய்தியாளர்களிடம் தெரிவித்திருந்த நிலையில் அன்று இரவே இந்த கைது இடம்பெற்றுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’