-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
தேர்தலில் போட்டி : இரு தினங்களில் முடிவை அறிவிப்பதாக ரணதுங்க தெரிவிப்பு
இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட, சுழல்பந்து வீச்சு வீரர்கள் மற்றும் ஓட்ட வீராங்கனை ஒருவர் என விளையாட்டுத்துறையைச் சார்ந்த மூவர் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடவுள்ள நிலையில், இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க தனது நிலைப்பாடு குறித்து இன்னும் இரண்டு தினங்களில் அறிவிப்பதாக எமது இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான அர்ஜுன ரணதுங்க, கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கினார். எதிர்க்கட்சி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கிய போதும் தான் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து விலகப் போவதில்லை என்பதையும் அவர் அறிவித்திருந்தார்.
இந்நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்காத ஒருவரை, சுதந்திரக் கட்சியில் போட்டியிட வைப்பது குறித்து சிரேஷ்ட உறுப்பினர்களிடையே கருத்து முரண்பாடுகள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், தேர்தலில் போட்டியிடுவது குறித்துத் தீர்க்கமாக ஆராய்ந்து வருவதாக ரணதுங்க தெரிவித்தார்.
1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டிகளில் வெற்றிவாகை சூடியதன் பின்னர் அணித் தலைவர்கள் வரிசையில் வெற்றித் தலைவர் என ரணதுங்க புகழப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’