வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளது


பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதுவரை காலமும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்றம் கலைக்கப்பட்டுள்ள நிலையில் அனைவரும் சாதாரண பொதுமக்கள் என்னபதால் அவர்களுக்கான பாதுகாப்பு குறைக்கப்பட்டுள்ளது என காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசந்த ஜயகொடி தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை காவல்துறை மா அதிபர் மஹிந்த பாலசூரியவின் பணிப்புரையின் பேரில் மேற்கொண்டதாக தெரிவித்தார்.

எனினும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 8ம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் மீண்டும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படும் எனவும் தெரிவத்தார்.

இதேவேளை, பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் நோக்கில் அரசாங்கம் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

குறிப்பாக கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் தேர்தலுக்கு முன்னர் பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை களையவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பாராளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டமை தொடர்பில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் தேர்தல் ஆணையாளருக்கும் தெரியப்படுத்த உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’