-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
செவ்வாய், 23 பிப்ரவரி, 2010
புலிகளின் நடவடிக்கை குறித்து மாலை தீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டும் என ரோஹித்த பொகொல்லாகம தெரிவிப்பு.
புலிகளின் நடவடிக்கைகள் குறித்து மாலைதீவு எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம தெரிவித்துள்ளார்.
மாலைதீவு வெளிவிவகார அமைச்சர் டொக்டர் அஹமட் ஷடீடை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போது இராணுவ ரீதியாக தோற்கடிக்கப்பட்டுள்ள புலிகள் அமைப்பு வேறும் வழிகளில் தமது இலட்சியத்தை நிறைவேற்றிக் கொள்ள முனைப்பு காட்டி வருவதாக இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த பொகொல்லாகம சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக இலங்கை மற்றும் மாலைதீவு போன்ற நாடுகளில் வைற் கொலர் (கனவான்களைப் போன்று) சட்டவிரோத நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடுமென எச்சரிக்கை விடுத்துள்ளார். எனவே முக்கியமான தகவல்களை இரு நாடுகளும் பகிர்ந்து கொள் வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். இச்சந்திப்பில் புலனாய்வுத் தகவல்களை பரிமாறிக் கொள்வது தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திடுவது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’