
இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தான் லாகூர் நகரில் கடந்த வருடம் இடம்பெற்ற தாக்குதல் தொடர்பான அறிக்கை காலதாமதமாவதற்கான உரிய காரணத்தை அந்நாட்டு நாடாளுமன்றத்தின் விளையாட்டுக்குப் பொறுப்பான குழு கோரியுள்ளது.
தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்ட மாநில பாதுகாப்புச் செயலாளருக்கும் பொலிஸ் தலைமை அதிகாரிக்கும் இம்மாத இறுதியில் நாடாளுமன்றக் குழுவினரைச் சந்திக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் சுற்றுப் பயணத்தை மேற்கொண்டிருந்த இலங்கை அணியினர் மீது கடந்த 2009ஆம் ஆண்டு மார்ச் மாதம் இனந்தெரியாதோரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
1 கருத்துகள்:
Pak Karamu visiting your blog
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’