வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 21 பிப்ரவரி, 2010

பிரிட்டிஷ் கவுன்சில் யாழில் தனது பணிமனையினை ஆரம்பிக்கவுள்ளது.


கல்வி உயர்கல்வி பல்கலைத்துறையில் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கவுன்சில் யாழ்ப்பாணத்தில் தனது பணிமனையினை ஆரம்பித்து சேவையை தொடரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கொழும்பில் தனது தலைமையகத்தை கொண்டுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலானது மாணவர்களின் ஆளுமையை விருத்திசெய்து வளமான எதிர்காலத்திற்கான வாய்ப்புக்களை ஏற்படுத்தி கொடுப்பதுடன் இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையில் நெருங்கிய உறவுப்பாலமாகவும் செயற்பட்டு வருகின்றது.

கொழும்பிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலில் கணிசமான வடபகுதி மாணவர்கள் தமது இணைப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில் யாழ்ப்பாணத்தில் அதன் பிரிவொன்றினை ஆரம்பிக்க வேண்டிய தேவையினை தாம் உணர்ந்துகொண்டுள்ளதாக தெரிவித்துள்ள அதன் நிறைவேற்று அதிகாரி ஒருவர் பிரசித்திபெற்ற யாழ். பொதுநூலகத்தில் தமது பணிமனையினை ஆரம்பிக்க விருப்பம் கொண்டுள்ளதாகவும் இது குறித்து யாழ். மாநகர முதல்வருக்கு வேண்டுகோள் சமர்ப்பித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’