வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 17 பிப்ரவரி, 2010

லியாம் பொக்ஸ் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடினார்.

இலங்கைக்கான விஜயத்தை மேற்கொண்டிருக்கும் பிரிட்டிஷ் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி லியாம் பொக்ஸ் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.

இன்றையதினம் அலரி மாளிகையில் இடம்பெற்ற மேற்படி சந்திப்பில் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரொமேஸ் ஜெயசிங்க ஆகியோரும் பங்குகொண்டனர். பிரிட்டிஷ் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான கலாநிதி லியாம் பொக்ஸ் அந்நாட்டின் நிழல் பாதுகாப்பு அமைச்சர் எனவும் அழைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது.


0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’