வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2010

அநுராதபுரத்தில், பல சமய சடங்குகளுடன் தேர்தல் பரப்புரையை தொடக்கினார் மகிந்த ராஜபக்ச‌


ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு பல சமய சடங்குகளுடன் வரலாற்று சிறப்பு மிக்க அநுராதபுரம் நகரத்தில் இருந்து தன் தேர்தல் பரப்புரை பணிகளை தொடங்கியது.
ஏப்ரல் 8 ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தலில் போட்டியிடும் பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்க, வண.எல்லாவல மேதானந்த தேரோ மற்றும் அனைத்து ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு வேட்பாளர்களும் ஜனாதிபதி ராஜபக்சவுடன் நேற்று பிற்பகலில் ஜெய ஸ்ரீ மஹா போதியில் நடைபெற்ற சமய சடங்குகளில் பங்குபெற்றனர்.

பௌத்த மத துறவிகள், வேட்பாளர்களுக்கும் அதிபர் ராஜபக்சவுக்கும் பிரித் ஓதி ஆசிகள் வழங்கினர். தொடர்ந்து நடைபெற்ற தியானத்திலும் அனைவரும் பங்கு பெற்றனர்.

ஆளும் கட்சியின் கிறிஸ்துவ வேட்பாளர்களுக்கான சமய சடங்குகள் அநுராதபுரத்தில் உள்ள புனித ஜோசப் பேராலயத்திலும், இந்து சமய சடங்குகள் கதிரேசன் கோவிலிலும் இஸ்லாமிய மத சடங்குகள் மொஹிடீன் ஜும்மா மசூதியிலும் நடைபெற்றன.

இந்த சமய சடங்குகளை தொடர்ந்து வேட்பாளர்கள் அனைவரும் அநுராதபுரத்தில் உள்ள அதிபர் வீட்டின் முன் கூடி தேர்தலை வன்முறையின்றி நேர்மையாகவும், சுதந்திரமாகவும், தேர்தல் விதிமுறைகளின்படியும் நடத்துவதற்கான உறுதிமொழிகளை எடுத்துக் கொண்டனர்.

நாட்டில் உள்ள 22 மாவட்டங்களில் மொத்தம் 264 வேட்பாளர்களை ஆளும் கட்சி நிறுத்தியுள்ளது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’