வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 16 பிப்ரவரி, 2010

புனே குண்டுவெடிப்பு : பொலிஸ்-தனிப்படை அதிரடியில் நால்வர் கைது


புனே குண்டு வெடிப்புடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தில் அவுரங்காபாத் நகரில் இருவரைத் தனிப்படை பொலிசார் இன்று கைது செய்தனர். இவர்களுக்கும் புனே குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

மராட்டிய மாநிலம் புனேயில் உள்ள ஜெர்மன் உணவு விடுதியில் கடந்த சனிக்கிழமை மாலை நடந்த குண்டு வெடிப்பில் 10 பேர் பலியானார்கள். 60-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

புனே குண்டு வெடிப்புக்கு இதுவரை எந்தத் தீவிரவாத இயக்கமும் பொறுப்பு ஏற்கவில்லை. என்றாலும், குண்டுவெடிப்பு நடந்துள்ள விதம் மற்றும் குண்டு தயாரிக்கப்பட்டுள்ள முறைகள் மூலம் புனே குண்டு வெடிப்பை இந்திய முஜாகிதீன்கள் தான் நடத்தி இருக்க வேண்டும் என்று சந்தேகிக்கப்படுகிறது. இந்தியன் முஜாகிதீன் அமைப்பு 3 குழுக்களாக செயல்படுகிறது.

சாதிக் ஷேக் என்பவர் தலைமையில் மும்பையைத் தலைமையகமாகக் கொண்டு ஒரு குழு இயங்குகிறது. ரியாஸ் பட்கல் தலைமையில் தென் இந்தியாவில் ஒரு குழுவும், அதீப் அமீன் என்பவர் தலைமையில் வட இந்தியாவில் மற்றொரு குழுவும் இயங்கி வருகின்றன. இதில் அதீப் கடந்த 2008ஆம் ஆண்டு டில்லியில் சுட்டுக் கொல்லப்பட்டு விட்டார்.

இந்த நிலையில் புனேயில் பொலிசார் நடத்திய அதிரடி வேட்டையில் 2 சதிகாரர்கள் சிக்கினார்கள். ஒருவன் குடல்வாடிபகுதியிலும் மற்றொருவன் ஜன்வாடி பகுதியிலும் பிடிபட்டனர். அவர்கள் இருவரும் ஆர்.டி.எக்ஸ். வெடிகுண்டை கொண்டு வந்து பேக்கரிக்குள் வைத்து விட்டு சென்றவர்கள் என்று தெரிகிறது.

ரியாஸ் பட்கல் தலைமையிலான தென் இந்திய முஜாகிதீன்களே புனே குண்டு வெடிப்பை நடத்தி இருப்பதாக தேசிய புலனாய்வு அமைப்பு கண்டுபிடித்துள்ளது. ஜெர்மன் உணவகத்துக்கு எதிரில் உள்ள ஹோட்டலில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு கெமராவில் பதிவான படங்கள் மூலம் துப்பு துலக்கப்பட்டது. அதில் 2 மர்ம மனிதர்களின் நடமாட்டம் தெரிந்தது.

அந்தக் கெமராப் படங்கள் மூலம் துல்லியமான துப்பு கிடைத்துள்ளதாகவும் விரைவில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடுவார்கள் என்றும் புனே பொலிஸ் கமிஷனர் சத்யபால் சிங் இன்று நிருபர்களிடம் தெரிவித்தார்.

இதற்கிடையே அவுரங்காபாத் நகரில் 2 பேர் தனிப்படை பொலிசாரிடம் பிடிபட்டனர். இவர்களுக்கும் புனே குண்டு வெடிப்புக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.

அவர்களைப் பொலிசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரித்து வருகிறார்கள். இதன் மூலம் விசாரணை சரியான பாதையில் நடைபெற்று வருவதாக புனே பொலிஸ் கமிஷனர் சத்யபால் சிங் மேலும் கூறினார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’