வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வெள்ளி, 5 பிப்ரவரி, 2010

யாழ். வண்ணை சிவன்கோவில் தேர்முட்டியில் ஐம்பொன் விக்கிரகம் காணப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு.


பிரசித்திபெற்ற யாழ். வண்ணார்பண்ணை சிவன்கோவில் தேர்முட்டியில் ஐம்பொன் சிலையொன்று பொலிஸாரால் கைப்பற்றப்பட்டதை அடுத்து பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

குறிப்பிட்ட தேர்முட்டி பகுதியை சுத்தம் செய்யும் நோக்குடன் இளைஞன் ஒருவர் கோவில் தேரில் ஏறியபோதே தேரின் ஆசனத்தில் மேற்படி ஐம்பொன் விக்கிரகத்தை கண்டுள்ளார். இவ்விடயம் வெளியே தெரியவந்ததும் பெருமளவு பொதுமக்கள் சாரிசாரியாக படையெடுத்து வந்து அதனை பார்வையிடத் தொடங்கினார்கள். இதனையடுத்து தேவஸ்தான அறங்காவல் சபையினர் இதுகுறித்து யாழ். பொலிஸாருக்கு அறித்ததை தொடர்ந்து அவ்விடத்திற்கு விரைந்து சென்ற யாழ். பொலிஸார் ஐம்பொன் சிலையை மீட்டு எடுத்துச் சென்றுள்ளனர். குறித்த விக்கிரகமானது வேறொரு பிரதேசத்திலிருந்து களவாடப்பட்டு எவருக்கும் சந்தேகம் ஏற்படாதவண்ணம் யாழ். சிவன் கோவில் தேர்முட்டியில் ஒளித்து வைக்கப்பட்டிருக்கலாம் என பரவலாக நம்பப்படுகின்றது. எவ்வாறாயினும் குறித்த ஐம்பொன் சிலை இருந்ததாக கருதப்படும் கோவில் நிர்வாகிகள் தகுந்த ஆதாரத்துடன் தம்முடன் தொடர்புகொண்டு அதனை பெற்றுக்கொள்ள முடியுமென யாழ். பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’