
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைது குறித்து ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன், இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் தொலைபேசியில் தொடர்புகொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் இதனை நியூயோர்க்கில் வைத்து செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு மற்றும் உரிமைகள் உறுதிப்படுத்தப்படவேண்டும் என பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளதாகவும் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பேச்சாளர் மார்டின் நெஸிர்கியின் தகவலின்படி, சரத் பொன்சேகாவின் கைது சம்பவத்தை தொடர்ந்து எழுந்துள்ள நிலைமை தொடர்பில் பான் கீ மூன் கவனம் செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடாளுமன்ற தேர்தலுக்கு இலங்கை தயாராகிக் கொண்டிருக்கும் நிலையில், நாட்டில் சமாதானம் மற்றும் ஸ்திரத்தன்மை என்பவற்றை உறுதிப்படுத்தவேண்டும் என்றும் பான் கீ மூன் வலியுறுத்தியுள்ளார்.
எனினும், இலங்கையில் எத்தனையோ மனித உரிமை மீறல் செயற்பாடுகள், போர்க்குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளபோதிலும், ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கௌரவ பான் கீ மூன் அவர்கள், இதுவரை இலங்கை (மகிந்த ராஜபக்ச) அரசாங்கத்திற்கு எதிரான எந்தவித நடவடிக்கைகளோ, கண்டனங்களோ மேற்கொள்ளவில்லை. பதிலாக மெத்தனப்போக்கையே கடைப்பிடித்து வந்துள்ளமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’