வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 23 பிப்ரவரி, 2010

லண்டன்-சிகரெட்டுக்காக இந்தியரை கொன்ற திருடர்கள்


லண்டன்: இந்தியர் நடத்தி வந்த கடைக்கு வந்த திருடர்கள், அங்கிருந்த கடை உரிமையாளர் குர்மெயில் சிங் என்பவரிடம் சிகரெட், இனிப்பு தருமாறு கேட்டுள்ளனர். ஆனால் அவர் தர மறுத்ததால் ஆத்திரமடைந்து கத்தியால் குத்திக் கொன்று விட்டனர்.

கொல்லப்பட்ட சிங்குக்கு 63 வயதாகிறது. இரு குழந்தைகளுக்கு தந்தை. கொலையாளிகள் டீன் ஏஜ் வயதுடையவர்கள் என்று தெரிய வந்துள்ளது. அவர்களைப் பிடிக்க போலீஸார் தீவிர வேட்டையில் இறங்கியுள்ளனர்.

ஹட்டர்ஸ்பீல்ட் என்ற இடத்தில் தனது நிறுவனத்தை நடத்தி வந்தார் சிங். சனிக்கிழமை அங்கு சிலர் வந்தனர். அவர்கள் சிங்கை மிரட்டி சிகரெட், இனிப்பு ஆகியவற்றைக் கேட்டனர். ஆனால் அவர் தர மறுத்ததால் கத்தியால் தலையில் குத்தி விட்டனர்.

இதில் தலையில் பலத்த ரத்தக் காயம் ஏற்பட்டு மயங்கி விழுந்தார் சிங். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால் அடுத்த நாள் அவர் உயிரிழந்தார்.

மொத்தம் நான்கு பேர் வந்ததாக கூறப்படுகிறது. சிங்கைக் கொன்ற பின்னர் அங்கிருந்த பணம் மற்றும் சிகரெட், இனிப்பு வகைகளை எடுத்துக் கொண்டு ஓடி விட்டனர்.

இது வழிப்பறி சம்பவம்தான். ஆத்திரத்தில் கொலை செய்து விட்டு அவர்கள் தப்பியுள்ளதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது இனவெறித் தாக்குதல் அல்ல என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

திருடர்களைப் பிடிக்க அருகில் இருந்த பப்பில் இருந்த 6 பேர் முயன்றனர். கடுமையாகப் போராடிய திருடர்கள் அவர்களிடமிருந்து தப்பி ஓடி விட்டனர்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’