வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

சனி, 20 பிப்ரவரி, 2010

இனப்பிரச்சினை தீர்வுக்காக தமிழ், முஸ்லிம் தலைவர்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது அவசியம்: மஹிந்த “இந்தியா எனது உறவினர்! ஏனைய நாடுகள் எனது நண்பர்கள்”


கடந்த ஜனாதிபதி தேர்தலில் 18 வீத அதிகப்படியான வாக்குகளை பெற்று தாம் வெற்றியீட்டியமையானது தமக்கு ஆச்சரியத்தை அளித்துள்ளதாக இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய த ஹிந்து நாளிதழுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார். வடக்கில் உள்ள மக்கள் தமக்கு வாக்களிக்கவில்லை என்பது குறித்து தாம் கவலை கொள்ளவில்லை எனக்குறிப்பிட்டுள்ள அவர் அங்கும் சிலர் தமக்கு வாக்களித்தமையை சுட்டிக்காட்டியுள்ளார்.

சரத் பொன்சேகாவின் அரசியல் சாணக்கியமின்மை, அவருடைய பேச்சு, மக்கள் அவர் மீது கொண்டிருந்த பயம், பொருளாதாரத்துறையில் அனுபவமின்மை என்பனவே தமக்கு அதிகப்படியான வெற்றிக்கு காரணமாக அமைந்திருந்ததாக மஹிந்த ராஜபக்ச சுட்டிக்காட்டிள்ளார்.

சரத் பொன்சேகா தமது தேர்தல் பிரசார இறுதிக்காலத்தின் போது தேர்தல் வாக்குறுதிகள் குறித்து எதுவும் பேசாமல் தம்மை கைதுசெய்து அதி பாதுகாப்புக்கூடிய போகம்பரை சிறையில் அடைக்கவேண்டும் உட்பட்ட தமது குடும்பத்திற்கு எதிரான கருத்துக்களையே தெரிவித்து வந்ததாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

தம்மைப்பொறுத்தவரை தாம் மேற்கொண்ட அபிவிருத்திகளை மக்கள் ஏற்றுக்கொண்டிருந்தார்கள் எனத் தெரிவித்துள்ள அவர், சரத் பொன்சேகாவின் முகாமில் இருந்தோர் அதனை அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு கிராமங்களில் உள்ள மக்கள் பெருமளவில் வாக்களித்ததாக தெரிவித்த அவர் ஜனநாயகத்தை சமாதானத்தை விரும்பிய நகர்ப்புற குறிப்பாக கொழும்பு கண்டி மக்களும் தமக்கு வாக்களித்ததாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழீழ விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தில் வெற்றிக்கு காரணமானவர் யார் என்ற விடயத்தில் மக்கள் தமது வாக்குகள் மூலம் தம்மையே தெரிவு செய்ததாக குறிப்பிட்ட மஹிந்த ராஜபக்ச தாஜ்மஹாலை கட்டிய மேசனையோ அல்லது சிரேஸ்ட பொறியியலாளரையோ மக்கள் நினைவு கூருவதில்லை என தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் பொதுத்தேர்தலில் தாம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெறலாம் என்ற நம்பிக்கையை வெளியிட்டுள்ள அவர், ரணில் விக்கிரமசிங்கவின் கூட்டத்தினரும் தம்முடன் இணைவார்கள் எனத் தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்று “மஹிந்த போடா” “கோத்தபாய போடா” பசில் போடா” என தமிழில் பேசியதாக மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இதன் மூலம் தம்மை நிராகரிக்குமாறு மக்களிடம் அவர் கேட்டுக்கொண்டதாக மஹிந்த தெரிவித்துள்ளார். இலங்கையின் சமாதானமான இனப்பிரச்சினை தீர்வுக்கு எதிர்க்கட்சிகளின் ஒத்துழைப்பு அவசியம் என்பதை ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

13 வது அரசியலமைப்பு சீர்திருத்தம் பிரச்சினையை முறையாக தெரிந்து கொள்ளர்து அவசரமாக கொண்டு வரப்பட்ட ஒன்று என தெரிவித்த அவர், தற்போதைய சூழ்நிலையில் பொலிஸ் அதிகாரத்தை தவிர ஏனைய அதிகாரங்களை நடைமுறைப்படுத்த முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்து விட்டது. பொதுத்தேர்தல் நடைபெறப்போகிறது. அடுத்ததாக வடக்கு மாகாணத்திற்கான தேர்தலை நடத்திய பின்னரும் இடம்பெயர்ந்தோரை குடியமர்த்திய பின்னரே இந்த நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே வடக்குகிழக்கு பகுதிகளில் இருந்து தமிழ் முஸ்லிம் இளைஞர்கள் படைகளில் இணைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் ஏற்கனவே பயிற்சி பெற்றவர்கள் என்ற அடிப்படையில் அவர்களை மீண்டும் பயிற்சிக்கு உட்படுத்ததாது அவர்களுக்கு பொலிஸ் பயிற்சிகள் மாத்திரம் வழங்கப்படவுள்ளன. அத்துடன் அவர்கள் தென்னிலங்கையிலும் கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளார்கள் என மஹிந்த ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பை பெர்றுத்தவரையில் 20 வருடங்களுக்கு முன்னர் சிங்களவர்கள் 90 வீதமாக இருந்த நிலைமை மாறி இன்று அவர்களின் வீதம் 30 ஆக குறைந்துள்ளது. இந்தநிலையில் தமிழ் முஸ்லிம் மக்களின் சனத்தொகை கொழும்பில் அதிகரித்துள்ளமையானது எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்ததாது என்றும் மஹிந்த தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு பின்னர் இனப்பிரச்சினை தீர்வு தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்படும். அதன் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உட்பட்ட கட்சிகள் அதில் பங்கேற்க வேண்டும். இதன் மூலமே பிரச்சினைக்கு தீர்வைக் காணலாம் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

அவர்கள் தம்முடன் இணைந்து வர விருப்பமில்லாதவர்களாக இருப்பின் புதிய பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்படும் போது அவர்களுடன் இந்தப் பேச்சுவார்த்தைகளை தாம் நடத்தப்போவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்தியா தமது உறவினர் எனக் குறிப்பிட்டுள்ள மஹிந்த ராஜபக்ச இலங்கைக்கு உதவிசெய்யும் ஏனைய நாடுகள் தமது நண்பர்கள் என தெரிவித்துள்ளார்.

சரத் பொன்சேகாவின் கைது தொடர்பாக கருத்துரைத்துள்ள அவர், நீதித்துறையின் முன்னால் அவரின் விடயம் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளமையால் தம்மால் அதில் தலையிடமுடியாது எனக்குறிப்பிட்டுள்ளார். இந்தநிலையில் சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால் நாடு வன்முறைகளுக்கு உள்ளாகியிருக்கும் என மஹிந்த ராஜபக்ச தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’