வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 பிப்ரவரி, 2010

ஜெனரல் பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை


ஜெனரல் சரத் பொன்சேகாவின் மருமகன் நாட்டை விட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

பொன்சேகாவின் மருமகன் தனுன திலகரட்ன நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முடியாத வகையில் தடை செய்யுமாறு கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன, குடிவரவு-குடியகல்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

ஹைகோர்ப் ஆயுதக் கொடுக்கல் வாங்கல் விவகாரததில் தனுனவுக்கு தொடர்பு இருப்பதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தனுன இரகசியமான முறையில் நாட்டை விட்டு வெளியேறிச் செல்ல முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல்கள் கிடைக்கப் பெற்றதாகவும், அதன் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை, தனுன திலகரட்ன கோரிய முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்படக் கூடும் என்ற அச்சம் காரணமாக கோரப்பட்ட முன் பிணை மனு கோரிக்கையை கோட்டே நீதவான் நிராகரித்துள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’