வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

வியாழன், 11 பிப்ரவரி, 2010

முறையான சட்டங்கள் இல்லாவிடின் இராணுவத்தைக் கட்டுப்படுத்த முடியாது : அமைச்சர் பீரிஸ்


முறையான சட்டங்கள் இல்லாவிடின் இராணுவத்தைக் கட்டுப்படுத்த முடியாது என்றும் இராணுவ சட்டங்களின் அடிப்படையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மீது விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஏற்றுமதி அபிவிருத்தி மற்றும் சர்வதேச வர்த்தகத்துறை அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பி;ட்டார். “ஜெனரல் சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டதன் பின்னணியில் எந்தவொரு அரசியல் நோக்கமும் இல்லை. சில அரசியல் கட்சிகள் இந்த விடயத்தைக் கொண்டு அரசியல் இலாபத்தைத் தேட முயற்சிக்கின்றன” என அவர் மேலும் தெரிவித்தார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’