வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

புதன், 3 பிப்ரவரி, 2010

வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே கோரிக்கை


நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலின் போது வாக்கு எண்ணும் நிலையங்களில் வழங்கப்பட்ட இறுதி முடிவுகளின் கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
அகில இலங்கை ரீதியில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகள் தொடர்பான கார்பன் பிரதிகளை சமர்ப்பிக்குமாறு கபே அமைப்பு, தேர்தல் ஆணையாளருக்கு எழுத்து மூலம் கோரியுள்ளது.

இதற்கு ஏதேனும் செலவுகள் ஏற்பட்டால் அந்த செலவுகளை தமது அமைப்பு பொறுப்பேற்றுக் கொள்வதாக கபே அமைப்பின் பணிப்பாளர் கீர்த்தி தென்னக்கோன் தெரிவித்துள்ளார்.

இது ஓர் பொதுவான ஆவணம் எனவும் இதனை வெளியிடுவதில் சிக்கல் இருக்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில வாக்கு எண்ணும் நிலையங்களில் பிரதிநிதிகள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டதாக முறைப்பாடு கிடைக்கப் பெற்றுள்ளதாகவும், இதனால் சகல வாக்கு எண்ணும் நிலையங்களில் வெளியிடப்பட்ட இறுதி முடிவு தொடர்பான கார்பன் பிரதிகள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறித்த ஆவணத்தை சமர்ப்பிப்பதன் மூலம் தேர்தல் மோசடி தொடர்பில் நிலவும் கருத்துக்களில் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’