-
வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்
;
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
அமெரிக்கா: விமானத்தை கட்டிடத்தில் மோதி சாஃப்ட்வேர் இன்ஜினியர் தற்கொலை !!
ஆஸ்டின்: சிறிய ரக ஒற்றை இன்ஜின் விமானத்தை ஏழு அடுக்கு மாடி கட்டிடத்தின் மீது மோதி அமெரிக்க பைலட் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத் தலைநகரான ஆஸ்டினில் வருமான வரித்துறை உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் இயங்கும் ஏழு அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது.
ஆண்ட்ரூ ஜோசம் ஸ்டாக் (53) என்ற சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஒற்றை இன்ஜின் கொண்ட விமானம் ஒன்றை ஓட்டி வந்து நேற்று திடீரென இந்த கட்டிடத்தின் முதல் மற்றும் 2வது மாடிக்கு இடைப்பட்ட பகுதியில் மோதினார்.
இதில் விமானம் வெடித்துச் சிதறி ஜோசப் உயிரிழந்தார். விமானம் மோதியதால் கட்டிடம் சேதமடைந்து இரண்டு பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விமானம் மோதிய பகுதியில் இருந்த அலுவலகத்தில் சுமார் 160 பேர் பணியாற்றிக் கொண்டிருந்தனர். விமானம் இரண்டு மாடிக்கு இடைப்பட்ட இடத்தில் மோதியதால் கட்டித்துக்கு சேதாரம் குறைவாக இருந்ததாகவும், ஊழியர்கள் பிழைத்ததாகவும் அதிகாரிகள் கூறினர்.
சம்பவம் குறித்து விசாரணை நடத்திய போலீசார் விமானத்தின் பைலட் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணத்தோடு தான் கட்டிடத்தில் மோதியிருக்கிறார் என்பதை கண்டுபிடித்தனர்.
அன்லைனில் ஜோசப் தற்கொலை குறிப்பு எழுதி வைத்திருந்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர். அதில்,
'வரித்துறை அலுவலகத்தில் இருக்கும் சகோதரர்களே என்னுடைய ரத்தத்தையும், சதையையும் எடுத்துக் கொள்ளுங்கள். நிம்மதியாக இருங்கள்' என்று குறிப்பிட்டு விட்டு தனது பெயருக்கு பக்கத்தில் '1956-2010' என்று வாழ்ந்த காலத்தையும் குறிப்பிட்டுள்ளார்.
மிக அதிகமான வரி விதிக்கப்பட்டதால் கோபமடைந்து அவர் இந்தத் தாக்குதலை நடத்தி தற்கொலை செய்து கொண்டதாகத் தெரிகிறது.
இந்த அலுவலகத்துக்கு அருகில் தான் சிஐஏவின் துணை அலுவலகம் உள்ளது. இதனால், முதலில் இது தீவிரவாத தாக்குதலாக இருக்கலாம் என்று கருதப்பட்டது.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’