
மன்னாரில் கடமையாற்றி வந்த சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயந்த விக்கிரமசிங்க மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் லஸாரிஸ் அசன் ஆகியோரின் திடீர் இடமாற்றம் அம்மாவட்ட மக்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டத்தில் அண்மைக்காலமாக இவர்கள் இருவரும் வர்த்தகர்கள் மற்றும் பொது மக்களிடம் தொலைபேசி மூலமாக கப்பம் கோருதல் போன்ற பலவிதமான பாதக செயல்களில் தலையிட்டு தீர்த்து வைத்ததோடு தமிழர், முஸ்லிம் என்ற வேறுபாடின்றி மக்களுக்கு சிறந்த சேவையினை ஆற்றி வந்தனர்.
இவர்கள் இருவரினதும் இடமாற்றம் மக்கள் மத்தியில் ஏற்பட்டிருந்த நம்பிக்கையைச் சீர்குலைக்கும் செயல் என சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். நடந்து முடிந்த ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து பொலிஸ், இராணுவ உயர் அதிகாரிகள் திடீரென மாற்றப்படுவதுடன் பதவி இறக்கமும் செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’