
ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் கைது செய்யப்பட்டு குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் தீவிர விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்த ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் 11 பேர் உள்ளிட்ட 14 பேர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தால் இன்று புதன்கிழமை விடுதலை செய்யப்பட்டனர்.
விடுதலை செய்யப்பட்டோரில் ஜெனரல் சரத் பொன்சேகாவின் களுத்துறை மாவட்ட தேர்தல் கண்காணிப்புப் பணிகளுக்குப் பொறுப்பான அதிகாரி ஒருவரும் சிவிலியன்கள் இருவரும் அடங்குவர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் பெறப்பட்ட வாக்குமூலங்களில் எதுவித குற்றங்களும் கண்டுபிடிக்கப்படவில்லை எனவும் நிபந்தனையற்றதும், பிணையில்லாததுமான முழுமையான விடுதலைக்கு உத்தரவிடுவதாகவும் நீதவான் சம்பா ஜானகி அறிவித்தார்.
இதனையடுத்து கொழும்பு 07 ராஜகிரிய மாவத்தையில் அமைந்துள்ள ஜெனரல் சரத் பொன்சேகாவின் அலுவலகத்துக்கு அழைத்துவரப்பட்ட அவர்களை அனோமா பொன்சேகா, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க ஆகியோர் சந்தித்து கலந்துரையாடினர்.
தாம் விசாரணைக்காக தடுத்துவைக்கப்பட்டிருந்த காலப்பகுதியில் தவறாக நடத்தப்படவில்லை என விடுதலை செய்யப்பட்டோர் தெரிவித்தனர்.
தனது கணவர் உட்பட தடுத்து வைக்கப்பட்டிருக்கும் அனைவரும் விரைவில் விடுதலை செய்யப்படவேண்டும் என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருவதாக குறிப்பிட்ட ஜெனரல் சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகா சந்தர்ப்பவாத அரசியலுக்கு எதிராக அனைவரும் அணி திரள வேண்டும் எனத் தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’