
ஆட்சிப் பலத்தை சொந்த அதிகாரங்களுக்காகப் பயன்படுத்தப்படும் அரசியலை இப்போதுதான் பார்ப்பதாகவும் பாதாளத்தை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் நாட்டை மீட்டெடுக்க அனைவரும் முன்வரவேண்டும் எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தார்.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் பாதுகாவலர்கள் உள்ளிட்ட 14பேர் விசாரணையின் பின்னர் இன்று விடுதலை செய்யப்பட்டனர். அவர்களைச் சந்தித்தபின்னர் ஊடகங்களுக்கு கருத்துக் கூறுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
“கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளதால் அவர்கள் நிரபராதிகள் என்பது தெளிவாகிறது. ஏனையோரும் இவ்வாறு விடுதலை செய்யப்படுவார்கள் என்ற நம்பிக்கை உண்டு.
எந்தத் தவறையும் செய்யாதவர்கள் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள். இது எந்த வகையில் நியாயம் என எனக்குத் தெரியவில்லை என அவர் அங்கு மேலும் தெரிவித்தார்.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’