வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

ஞாயிறு, 14 பிப்ரவரி, 2010

ரணிலின் தீர்மானம் குறித்து சிறுபான்மை கட்சிகள் அதிருப்தி


நாடாளுமன்றத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டியிடுவது தொடர்பில் அவசரப்பட்டு முடிவுகளை எடுக்க வேண்டாமென சில சிறுபான்மையினக் கட்சிகளின் தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவிடம் விடுத்த வேண்டுகோளை அவர் நிராகரிக்கும் வகையில் நடந்து கொண்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு நடந்து கொண்டமை ஏமாற்றத்தை யும் அதிர்ச்சியையும் இக்கட்சித் தலைமைகளுக்கு ஏற்படுத்தியுள்ளதாக நம்பகரமான செய்திகள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருக்குமிடையில் நாடாளு மன்றத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் பேச்சுவார்த்தையொன்று இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சுவார்த்தையின் போது பல்வேறு விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன. அனைவரும் ஒள்றிணைந்து போட்டியிடுவது குறித்தும் இங்கு விரிவாகப் பேசப்பட்டது. இது தொடர்பில்“ ஐக்கிய தேசிய முன்னணிக்குள் ஓர் இணக்கப்பாட்டைக் காணும் வரைக்கும் ஐக்கிய தேசியக் கட்சி யானைச் சின்னத்தில் போட்டி யிடுவது குறித்து தீர்மானமெதனையும் எடுக்க வேண்டாமென மனோ கணேசனும் ரவூப் ஹக்கீமும் ரணில் விக்கிரமசிங்கவைக் கேட்டிருந்தனர்.

இதற்கு உடனடியாகவே ரணில் விக்கிரம சிங்க இணக்கம் தெரிவித்திருந்த நிலையில் அதே தினம் மாலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் செயற் குழுவைக் கூட்டி எதிர்வரும் பொதுத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆராய்ந்துள்ளார். அத்துடன் யானைச் சின்னத் திலேயே போட்டியிடுவதாகவும் அந்தக் கட்சி அன்றைய தினமே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பானது குறிப்பிட்ட தமிழ் பேசும் கட் சித் தலைவர்களுக்குப் பலத்த ஏமாற்றத்தைத் தந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ரணில் திடீர் சந்திப்பு

இது இவ்வாறிருக்க வெள்ளிக்கிழமை இரவும் ரணில் விக்கிரமசிங்கவுக்கும் மனோ கணேசன், ரவூப் ஹக்கீம் ஆகியோருக் குமிடை யில் மீண்டும் பேச்சுவார்த்தை நடந்து கொண்டி ருக்கும் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முக்கியஸ்தர்களும் அங்கு வருகை தந்துள் ளனர். இந்தச் சந்திப்பின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் சில விடயங் கள் முன்வைக்கப்பட்டதாக நம்பகமான வட்டா ரங்கள் தெரிவித்தன.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஐக்கிய தேசியக் கட்சியும் ஜனநாயக மக்கள் முன்ன ணியும் போட்டியிடக் கூடாதென்றும் அதற்குப் பதிலாக கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடுவதிலிருந்து தவிர்த்து கொள்ளுமென்றும் அங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தாம் தமது கட்சி உயர்பீடத்துடன் பேசியே தீர்வு காணமுடியுமென ரணில் விக்கிரமசிங்க தெரி வித்துள்ளளார். இந்தச் சந்திப்பில் தமிழ்த் தேசி யக் கூட்டமைப்பு சார்பில் இரா. சம்பந்தன், மாவை சேனாதிராசா,சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

மனோகணேசன் கருத்து

இந்த விடயம் குறித்து ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோகணேசன் கருத்துத் தெரிவிக்கையில் வடக்கு, கிழக்கு மாகாணத்தில் யாழ்,வன்னி,மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களில் தமது கட்சி வேட்பானர்களை நிறுத்தவே தீர்மானித்துள்ளது. இந்த மாகாணங்களைச் சேர்ந்த எமது ஆதரவாளர்களும் நாம் இங்கு போட்டியிட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளனர். இந்த நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இவ்வாறானதொரு வேண்டுகோளை விடுத்துள்ளதாக அறிய முடிகிறது. கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை மாவட்டங்களைவிட்டுக் கொடுப்பதில் எமக்குப் பிரச்சினையில்லை. ஆனால் ஏனைய மாவட்டங்கள் தொடர்பில் நாம் எமது கட்சியுடன் கலந்தாலோசித்தே முடிவெடுக்க வேண்டியுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகளான நாம் அனைவரும் எவ்வாறு ஒன்றி ணைந்து எமது ஒற்றுமையைக் காட்டினோமோ அதனையே நாம் பொதுத் தேர்தலிலும் கடைப்பிடிக்க விரும்புகிறோம். தங்களுக்குள் முரண்பாடுகள் ஏற்படாத வகையில் சில விட்டுக்கொடுப்புடன் நாம் பிரச்சினைகளைப் பேசித் தீர்க்கவே விரும்புகிறோம். எது எப்படியிருப்பினும் கிழக்கு மாகாணத்தின் திரு கோணமலை, அம்பாறை ஆகிய மாவட் டங்களில் நாம் நிச்சயமாகப் போட்டியிட மாட்டோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சுரேஷ் பிரேமச்சந்திரன்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளு மன்ற முன்னாள் உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந் திரன் இது தொடர்பில் வீரகேசரி வாரவெளி யீட்டுக்குக் கருத்துத் தெரிவிக்கையில், ரணில் விக்கிரமசிங்கவை எமது கட்சி சந்தித்தது உண்மையே. சமகால அரசியல் நிலைமைகளை ஆராய்வது தொடர்பிலே எமக்கிடையிலான சந்திப்பு இடம்பெற்றது. எதிர்வரும் நாடாளு மன்றத் தேர்தல் தொடர்பில் நாம் மனோ கணேசனுடனும் ரவூப் ஹக்கீமுடனும் பேச்சுவார்த்தை நடத்தவே உள்ளோம். நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு, கிழக்கில் நாம் தனித்துவமாகவே போட்டியிடவுள்ளோம். இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கி ரஸுடனும் ஜனநாயக மக்கள் முன்னணி யுடனும் ஓர் இணக்கப்பாடு காண்பதனையும் நாம் விரும்புகிறோம்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எமது கட்சியின் ஊடாகப் போட்டியிடுவதற்காக நாங்கள் எதிர்பார்த்ததனையும் விட அதிக ளவில் விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. பழைய முகங்கள் மட்டுமல்ல புதிய முகங்கள் புத்தி ஜீவிகள் எனப் பலரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடாகப் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ளனர். எமக்குக் கிடைத்த விண்ணப்பங்களைப் பரிசீலனை செய்து வேட்பாளர்களைத் தெரிவு செய்யும் பணிகள் அடுத்தவாரம் இடம் பெறுமெனவும் அவர் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரஸ் முஸ்லிம் காங்கிரஸ் செயலாளர் நாயகம் எம்.ரி. ஹஸன் அலி கருத்துத் தெரிவிக்கையில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் சிறுபான்மையினக் கட்சிகள் காட்டிய அதே ஐக்கியம் எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தொடர வேண்டு மென்பதே எமது கட்சியின் விருப்பம். அத் துடன் நாம் பெற்ற அந்த வெற்றி தொடர்ந்தும் கட்டிக்காக்கப்பட வேண்டும். இந்த அடிப்படையிலேயே நாம்“ பேச்சு வார்த்தை நடத்தி வருகிறோம். மூன்றிலிரண்டு பெரும்பான்மைப் பலத் துடன் தாம் வெற்றி பெறுவோமென ஆளுந் தரப்பினர் இப்போதிருந்தே கூறிவருகின்றனர். இவ்வாறான அவர்களது எதிர்பார்ப்பை தோல் வியடைச் செய்யும் சக்தியாக நாம் மாறவேண் டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றி ணைந்து செயற்படவேண்டும்.

மேலும், எமது கட்சி இந்தத் தேர்தலை எவ்வாறு முகம்கொள்வது என்பது குறித்தும் வேட்பாளர்கள் தெரிவு தொடர்பிலும் இவ் வாரம் கூடி ஆராயவுள்ளது. என்றார். இது இவ்வாறிருக்க ஐக்கிய தேசியக் கட்சி கடந்த ஜனாதிபதித் தேர்தலில் காட்டிய ஐக்கி யத்தையும் கண்ட உடன்பாட்டினையும் எதிர் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் காட்டுவதில் அக்கறை செலுத்துவதாகத் தெரியவில்லை யென்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் குற்றஞ் சாட்டியுள்ளதாக நம்பகமான செய்திகள் தெரிவிக்கின்றன. ஐக்கிய தேசியக் கட்சி தமிழ்பேசும் சிறு பான்மையின மக்களின் வாக்குகளை தமது கட் சிக்குப் பெற்றுக் கொள்வதில் காட்டும் ஆர்வத் தையும் அக்கறையையும் சிறுபான்மையினக் கட்சிகளின் ஊடாக வேட்பாளர்களை நிறுத்து வதில் காட்டவில்லையென்றும் அந்தக் கட்சி குற்றம் சாட்டியுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகிறது

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’