
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோரைக் கட்சியில் இணைத்துக் கொள்வது தொடர்பாக உத்தியோகபூர்வமாக முடிவெடுக்கவில்லை என்றும் அவ்வாறு அவர்கள் இணைந்து கொள்வார்களாயின் நாடு முழுவதிலும் வேட்பாளர்களை நிறுத்த ஏற்பாடு செய்வதாகவும் புதிய இடதுசாரி முன்னணியின் தலைவர் விக்ரமபாகு கருணாரத்ன எமது இணையத் தளத்துக்குத் தெரிவித்தார்.
எதிர்வரும் பொதுத் தேர்தலில் புதிய இடதுசாரி முன்னணியினர் வடக்கு கிழக்கில் போட்டியிடுவது தொடர்பாகg கேட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
"சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா ஆகியோர் எமது கட்சியில் இணைந்து போட்டியிட ஆர்வம் தெரிவித்துள்ளனர். நாம் மேலும் தமிழ் உறுப்பினர்கள் சிலரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். எனினும் உத்தியோகபூர்வ முடிவுகள் எதனையும் இதுவரை நாம் அறிவிக்கவில்லை" என்றும் அவர் தெரிவித்தார். அதேவேளை, தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு அறிவிக்கப்பட்ட பின்னர் தமது தீர்மானம் குறித்த கருத்தினை வெளியிடுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் எமது இணையத் தளத்துக்கு ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.













0 கருத்துகள்:
கருத்துரையிடுக
‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’