வாசகர்கள் அனைவருக்கும்இனியபுத்தாண்டுவாழ்த்துக்கள்

;

செவ்வாய், 9 பிப்ரவரி, 2010

சரத் பொன்சேகாவின் குற்றச்சாட்டிற்கு விளக்கமளிக்க அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஜெனீவா பயணம்.


ஜெனீவாவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு சென்றுள்ள மனித உரிமைகள் விவகார அமைச்சர் மஹிந்த சமரசிங்க ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் நவநீதம் பிள்ளையை சந்திக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சரணடைய வந்த புலித்தலைவர்களை படையினர் சுட்டுக்கொன்றதாக முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்த குற்றச்சாட்டு தொடர்பாக விளக்கம் அளிக்கும் முகமாகவே அமைச்சரின் இந்த விஜயம் அமைவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளருக்கு விபரமான விளக்கம் ஒன்றை அமைச்சர் வழங்குவார் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அமைச்சர்; மஹிந்த சமரசிங்கவுடன் சட்டமா அதிபர் மொஹான் பீரிஸம் ஜெனீவா சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

‘பின்னூட்டமிட்டு செல்லுங்கள்’